திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1373

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உணர்ந்திருந் துள்ளே யொருத்தியை நோக்கிற்கலந்திருந் தங்கே கருணை பொழியுமலர்ந்தெழு மோசை யொளியது காணுந்தளர்ந்தெழு சக்கரந் தான்றரு வாளே.

உரை

பாடல் #1372 இல் சொன்னபடி, சாதகர் தமக்குள் வீற்றிருக்கும் இறைவியை உணர்ந்தபின், அவளையே மனத்திற்குள் கண்டுகொண்டே தியானத்தில் வீற்றிருந்தால், இறைவியும் சாதகரோடு ஒன்றாகக் கலந்து அங்கிருந்தே சாதகருக்குப் பேரருள் கருணை பொழிவாள். அதன்பிறகு, சாதகருக்குள்ளிருந்து மலரைப் போல் மென்மையாக மலர்ந்தெழும் இறைவனின் அம்சமாகிய ஓசையையும், இறைவியின் அம்சமாகிய ஒளியையும் உருவாக்கி, அவர் காணும்படி அருள்வாள். அதன்பிறகு அந்த ஒளியும் ஓசையும் சாதகத்திற்கு ஏற்றவாறு இணங்கி, சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற நவாக்கிரி சக்கரத்தோடு சேர்ந்து செயல்படும்படி இறைவி அருள்வாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1372 இல் சொன்னபடி, சாதகர் தமக்குள் வீற்றிருக்கும் இறைவியை உணர்ந்தபின், அவளையே மனத்திற்குள் கண்டுகொண்டே தியானத்தில் வீற்றிருந்தால்,

  • வரி 2

    இறைவியும் சாதகரோடு ஒன்றாகக் கலந்து அங்கிருந்தே சாதகருக்குப் பேரருள் கருணை பொழிவாள்.

  • வரி 3

    அதன்பிறகு, சாதகருக்குள்ளிருந்து மலரைப் போல் மென்மையாக மலர்ந்தெழும் இறைவனின் அம்சமாகிய ஓசையையும், இறைவியின் அம்சமாகிய ஒளியையும் உருவாக்கி, அவர் காணும்படி அருள்வாள்.

  • வரி 4

    அதன்பிறகு அந்த ஒளியும் ஓசையும் சாதகத்திற்கு ஏற்றவாறு இணங்கி, சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற நவாக்கிரி சக்கரத்தோடு சேர்ந்து செயல்படும்படி இறைவி அருள்வாள்.

திருமந்திரம் பாடல் #1373

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout