தொடர்ந்து படிக்கread this section continuously
கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்கண்டவிம் மூர்த்தங் கனல்திரு மேனியாய்ப்பண்டமர் சோதிப் படரித ழானவையுண்டங் கொருத்தி யுணர்ந்து கொள்வார்க்கே.
உரைmeaning
பாடல் #1371 இல் சொன்னபடி, தங்கள் கரங்களில் ஆயுதங்களுடன் நவாக்கிரி சக்கரத்தைச் சூழ்ந்திருக்கின்ற அறுபத்துநான்கு சக்திகளும், தங்க ஆபரணங்களுடன், சுருண்டு நீண்டிருக்கும் தலைமுடியையே தாங்கள் அணிந்திருக்கும் ஆடையாகவும், அக்னிக் கனலையே தமது திருமேனியாகவும் கொண்டிருக்கிறார்கள். இதைத் தமக்குள் கண்டறிந்த சாதகர்கள், அந்த அக்னிக் கனலாகிய உருவம் ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாகக் கலந்திருக்கும் இறைவியேயென்று, தமக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் ஜோதி வடிவில் வீற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். இப்படித் தமக்குள் வீற்றிருக்கும் இறைவியை உணர்ந்துகொள்ள முடிந்த சாதகர்களால் மட்டுமே, அவள் ஒருவளே தமக்குள் முழுவதும் சக்திமயமாகப் படர்ந்திருக்கிறாள் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
As the previous verse says, the sixty-four saktis who surround the Navakshari Chakra with weapons in hand wear golden ornaments, and take their own long, curling hair as the very garment they wear, and the flame of fire itself as their own sacred form. Practitioners who come to see this within themselves can realize that this form of fiery flame is none other than the Goddess herself, equally merged with the Lord's own light-form that has existed from the beginning, seated in a form of light at the centre of the Navakshari Chakra within them. Only practitioners who are able to realize the Goddess seated thus within themselves can come to know further that she alone spreads throughout them entirely as power.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1371 இல் சொன்னபடி, தங்கள் கரங்களில் ஆயுதங்களுடன் நவாக்கிரி சக்கரத்தைச் சூழ்ந்திருக்கின்ற அறுபத்துநான்கு சக்திகளும், தங்க ஆபரணங்களுடன், சுருண்டு நீண்டிருக்கும் தலைமுடியையே தாங்கள் அணிந்திருக்கும் ஆடையாகவும், அக்னிக் கனலையே தமது திருமேனியாகவும் கொண்டிருக்கிறார்கள்.
As the previous verse says, the sixty-four saktis who surround the Navakshari Chakra with weapons in hand wear golden ornaments, and take their own long, curling hair as the very garment they wear, and the flame of fire itself as their own sacred form.
- வரி 2Line 2
இதைத் தமக்குள் கண்டறிந்த சாதகர்கள், அந்த அக்னிக் கனலாகிய உருவம் ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாகக் கலந்திருக்கும் இறைவியேயென்று,
Practitioners who come to see this within themselves can realize that this form of fiery flame is none other than the Goddess herself, equally merged with the Lord's own light-form that has existed from the beginning,
- வரி 3Line 3
தமக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் ஜோதி வடிவில் வீற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
seated in a form of light at the centre of the Navakshari Chakra within them.
- வரி 4Line 4
இப்படித் தமக்குள் வீற்றிருக்கும் இறைவியை உணர்ந்துகொள்ள முடிந்த சாதகர்களால் மட்டுமே, அவள் ஒருவளே தமக்குள் முழுவதும் சக்திமயமாகப் படர்ந்திருக்கிறாள் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
Only practitioners who are able to realize the Goddess seated thus within themselves can come to know further that she alone spreads throughout them entirely as power.
திருமந்திரம் பாடல் #1372





