திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1371

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தன சத்தியறு பத்து நால்வர்யிருந்தனர் கன்னிக ளெண்வகை யெண்மரிருந்தனர் சூழ வெதிர் சக்கரமாயிருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

உரை

பாடல் #1370 இல் சொன்னபடி, நவாக்கிரி சக்கரத்தில் இறைவியின் அம்சமாக அறுபத்துநான்கு சக்திகள் இருக்கின்றார்கள். இந்த அறுபத்துநான்கு சக்திகளும் என்றும் இளமையுடன், எட்டு வகையாகவும் ஒவ்வொரு வகைக்கும் எட்டு பேராகவும் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும், நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் வீற்றிருக்கும் இறைவிக்கு எதிர்ப்புறமாகவும் சக்கரத்தைச் சூழ்ந்தும், அதற்குப் பாதுகாப்பு வளையம் போல் இருக்கின்றார்கள். இப்படிச் சக்கரத்தைச் சூழ்ந்து பாதுகாப்பு வளையமாக இருக்கின்ற அறுபத்துநான்கு சக்திகளும், தமது இரு கைகளிலும் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டிருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1370 இல் சொன்னபடி, நவாக்கிரி சக்கரத்தில் இறைவியின் அம்சமாக அறுபத்துநான்கு சக்திகள் இருக்கின்றார்கள்.

  • வரி 2

    இந்த அறுபத்துநான்கு சக்திகளும் என்றும் இளமையுடன், எட்டு வகையாகவும் ஒவ்வொரு வகைக்கும் எட்டு பேராகவும் இருக்கின்றார்கள்.

  • வரி 3

    இவர்கள் அனைவரும், நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் வீற்றிருக்கும் இறைவிக்கு எதிர்ப்புறமாகவும் சக்கரத்தைச் சூழ்ந்தும், அதற்குப் பாதுகாப்பு வளையம் போல் இருக்கின்றார்கள்.

  • வரி 4

    இப்படிச் சக்கரத்தைச் சூழ்ந்து பாதுகாப்பு வளையமாக இருக்கின்ற அறுபத்துநான்கு சக்திகளும், தமது இரு கைகளிலும் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டிருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1371

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout