தொடர்ந்து படிக்கread this section continuously
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாயெந்தை கரங்க ளிருமூன்று முள்ளதுபந்தமாஞ் சூலப் படைபாசம் வில்லம்புமுந்தை கிலியெழ முன்னிருந் தாளே.
உரைmeaning
பாடல் #1369 இல் சொன்னபடி, தமக்குள்ளிருந்து கிடைத்த நவாக்கிரி மந்திரத்தையே சிந்தித்துக்கொண்டிருக்கும் சாதகரின் எண்ணங்களுக்குள், பிரகாசமான ஒளியைத் தருகின்ற ஜோதி வடிவமாகவும், எமது தந்தையான இறைவனின் அம்சத்தில் ஆறு கைகளைக் கொண்ட வடிவமாகவும் இறைவி தோன்றுகிறாள். அந்த ஆறு கைகளிலும் தீச்சட்டி, திரிசூலம், அங்குசம், பாசக் கயிறு, வில், அம்பு ஆகிய ஆறு ஆயுதங்களோடு, சாதகரின் முந்தைப் பிறவிகளிலிருந்து தொடர்ந்து வருகின்ற மும்மல இருள் அஞ்சி விலகும்படி, பேரொளியாக எழுந்து சாதகரின் சிந்தனைக்கு முன்பாக நிற்கின்றாள் இறைவி.
As the previous verse says, within the thoughts of a practitioner who is absorbed in the Navakshari mantra received from within, the Goddess appears as a form of radiant light, in the aspect of our father the Lord, bearing six arms. In those six arms she holds the six weapons, a pot of fire, a trident, a goad, a noose, a bow and an arrow, and, so that the threefold darkness of impurity carried forward from the practitioner's earlier births flees in fear, she rises as a great light and stands before the practitioner's thought.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1369 இல் சொன்னபடி, தமக்குள்ளிருந்து கிடைத்த நவாக்கிரி மந்திரத்தையே சிந்தித்துக்கொண்டிருக்கும் சாதகரின் எண்ணங்களுக்குள்,
As the previous verse says, within the thoughts of a practitioner who is absorbed in the Navakshari mantra received from within,
- வரி 2Line 2
பிரகாசமான ஒளியைத் தருகின்ற ஜோதி வடிவமாகவும், எமது தந்தையான இறைவனின் அம்சத்தில் ஆறு கைகளைக் கொண்ட வடிவமாகவும் இறைவி தோன்றுகிறாள்.
the Goddess appears as a form of radiant light, in the aspect of our father the Lord, bearing six arms.
- வரி 3Line 3
அந்த ஆறு கைகளிலும் தீச்சட்டி, திரிசூலம், அங்குசம், பாசக் கயிறு, வில், அம்பு ஆகிய ஆறு ஆயுதங்களோடு,
In those six arms she holds the six weapons, a pot of fire, a trident, a goad, a noose, a bow and an arrow,
- வரி 4Line 4
சாதகரின் முந்தைப் பிறவிகளிலிருந்து தொடர்ந்து வருகின்ற மும்மல இருள் அஞ்சி விலகும்படி, பேரொளியாக எழுந்து சாதகரின் சிந்தனைக்கு முன்பாக நிற்கின்றாள் இறைவி.
and, so that the threefold darkness of impurity carried forward from the practitioner's earlier births flees in fear, she rises as a great light and stands before the practitioner's thought.
திருமந்திரம் பாடல் #1370





