திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1369

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வைத்திடும் பொன்னுடன் மாதவ னோக்கிடில்கச்சிரு கொங்கை கலந்தெழு கன்னியைத்தச்சது வாக சமைந்தவிம் மந்திரமச்சியல் பாக வாயிரஞ் சிந்தியே.

உரை

பாடல் #1368 இல் சொன்னபடி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றி வைத்திருக்கும் தகட்டோடு, மாபெரும் தவமாக மனத்தை ஒருநிலைப்படுத்தி வேறெதையும் சிந்திக்காமல், அதையே மானசீகமாக உள்ளுக்குள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது, மார்புக் கச்சையால் கட்டப்பட்ட பேரழகும் அமிர்தமும் பொருந்திய இரு மார்பகங்களைக் கொண்டு, தகட்டுடன் சக்தியாகக் கலந்து, அதிலிருந்து பேரொளியாக எழுகின்ற என்றும் மாறாத இளமை பொருந்திய இறைவியைக் காணலாம். அதன்பிறகு சாதகர் செய்யும் சாதகத்தின் அளவிற்கு ஏற்றபடி, தகட்டோடு கலந்திருக்கும் இறைவியின் அருளால் நவாக்கிரி சக்கரத்திற்கான மந்திரம் சாதகருக்குள் உருவாகும். அந்த மந்திரம் இருக்கும் தன்மையிலிருந்து சிறிதும் மாறாமல், மானசீகமாக ஜெபித்து, அதையே தொடர்ந்து சிந்தித்திருக்க வேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1368 இல் சொன்னபடி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றி வைத்திருக்கும் தகட்டோடு, மாபெரும் தவமாக மனத்தை ஒருநிலைப்படுத்தி வேறெதையும் சிந்திக்காமல், அதையே மானசீகமாக உள்ளுக்குள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

  • வரி 2

    அப்போது, மார்புக் கச்சையால் கட்டப்பட்ட பேரழகும் அமிர்தமும் பொருந்திய இரு மார்பகங்களைக் கொண்டு, தகட்டுடன் சக்தியாகக் கலந்து, அதிலிருந்து பேரொளியாக எழுகின்ற என்றும் மாறாத இளமை பொருந்திய இறைவியைக் காணலாம்.

  • வரி 3

    அதன்பிறகு சாதகர் செய்யும் சாதகத்தின் அளவிற்கு ஏற்றபடி, தகட்டோடு கலந்திருக்கும் இறைவியின் அருளால் நவாக்கிரி சக்கரத்திற்கான மந்திரம் சாதகருக்குள் உருவாகும்.

  • வரி 4

    அந்த மந்திரம் இருக்கும் தன்மையிலிருந்து சிறிதும் மாறாமல், மானசீகமாக ஜெபித்து, அதையே தொடர்ந்து சிந்தித்திருக்க வேண்டும்.

திருமந்திரம் பாடல் #1369

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout