தொடர்ந்து படிக்கread this section continuously
மணிமுடி பாத சிலம்பணி மங்கையணிந்தவர்க் கன்றி யருளில்லை யாகுந்தணிந்தவர் நெஞ்சினுட் டன்னரு ளாகிப்பணிந்தவர்க் கன்றே பரகதி யாமே.
உரைmeaning
பாடல் #1376 இல் சொன்னபடி, தனது ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்திருக்கும் பேரழகுடன் நினைத்த அக்கணமே தோன்றும் இறைவி, தலையில் நவரத்தினக் கற்களால் ஆன கிரீடத்தை அணிந்தும், திருவடிகளில் சிலம்புகளை அணிந்தும், சாதகர்களின் நிலைக்கு ஏற்ப அருள்கின்ற என்றும் இளமையுடன் இருக்கிறாள். அவளைத் தமது மனத்திற்குள் பதிய வைக்கின்ற சாதகரைத் தவிர வேறு யாருக்கும் அவளது திருவருள் எளிதில் கிடைப்பதில்லை. இறைவியின் தூய அன்பில் நிறைந்திருக்கும் சாதகரின் நெஞ்சத்திற்குள் நினைக்கின்ற அனைத்துமே இறைவியின் திருவருளாக ஆகிவிடும். இப்படித் தமது மனத்திற்குள் அவளை பதிய வைத்த சாதகர்கள், அவளது திருவடிகளைப் பணிந்து தொழுதால், அவர்கள் பணிந்த அன்றே இறைவி முக்தி அடையும் வழியாக ஆவாள்.
As the previous verse says, the Goddess, who appears the instant one thinks of her, in the great beauty of the nine gems set in her garment, wears upon her head a crown made of nine precious stones and anklets upon her sacred feet, granting grace according to each practitioner's own state, ever youthful. Her sacred grace is not easily gained by anyone except the practitioner who fixes her within his own mind. Within the heart of a practitioner filled with the pure love of the Goddess, everything he thinks becomes her sacred grace itself. To practitioners who have thus fixed her within their mind and worship her sacred feet, she herself becomes, the very day they worship her, the way to liberation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1376 இல் சொன்னபடி, தனது ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்திருக்கும் பேரழகுடன் நினைத்த அக்கணமே தோன்றும் இறைவி, தலையில் நவரத்தினக் கற்களால் ஆன கிரீடத்தை அணிந்தும், திருவடிகளில் சிலம்புகளை அணிந்தும்,
As the previous verse says, the Goddess, who appears the instant one thinks of her, in the great beauty of the nine gems set in her garment, wears upon her head a crown made of nine precious stones and anklets upon her sacred feet,
- வரி 2Line 2
சாதகர்களின் நிலைக்கு ஏற்ப அருள்கின்ற என்றும் இளமையுடன் இருக்கிறாள். அவளைத் தமது மனத்திற்குள் பதிய வைக்கின்ற சாதகரைத் தவிர வேறு யாருக்கும் அவளது திருவருள் எளிதில் கிடைப்பதில்லை.
granting grace according to each practitioner's own state, ever youthful. Her sacred grace is not easily gained by anyone except the practitioner who fixes her within his own mind.
- வரி 3Line 3
இறைவியின் தூய அன்பில் நிறைந்திருக்கும் சாதகரின் நெஞ்சத்திற்குள் நினைக்கின்ற அனைத்துமே இறைவியின் திருவருளாக ஆகிவிடும்.
Within the heart of a practitioner filled with the pure love of the Goddess, everything he thinks becomes her sacred grace itself.
- வரி 4Line 4
இப்படித் தமது மனத்திற்குள் அவளை பதிய வைத்த சாதகர்கள், அவளது திருவடிகளைப் பணிந்து தொழுதால், அவர்கள் பணிந்த அன்றே இறைவி முக்தி அடையும் வழியாக ஆவாள்.
To practitioners who have thus fixed her within their mind and worship her sacred feet, she herself becomes, the very day they worship her, the way to liberation.
திருமந்திரம் பாடல் #1377





