தொடர்ந்து படிக்கread this section continuously
பரந்தி ருந்துள்ளே யறுப்பது சத்திகரந்தன கன்னிக ளப்படி சூழமலர்ந்திரு கையில் மலரவை யேந்திச்சிறந்தவ ரேத்துஞ் சிறீதன மாமே.
உரைmeaning
அனைத்திலும் பரவி விரிந்திருக்கும் இறைவி, சாதகருக்குள்ளிருந்து அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற சக்தியாக இருக்கிறாள். பாடல் #1371 இல் சொன்னபடி, அவளது அருளைச் சாதகர்க்குக் கொணர்ந்து கொடுக்கின்ற அறுபத்துநான்கு சக்திகளும், சாதகர் இருக்கும் நிலையில் அவரைச் சூழ்ந்திருந்து, பாடல் #1376 இல் சொன்னபடி மலர்ந்திருக்கும் தமது இரு கைகளிலும் தாமரை மலர்களைப் பல வகைகளில் ஏந்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அருளால் தம் சாதகத்தைச் சிறப்பாகச் செய்கின்ற சாதகர்கள் போற்றி வணங்குகின்ற, நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ என்னும் பீஜ மந்திரத்தின் பலனாகவே இறைவி இருக்கிறாள்.
The Goddess, who is spread out and pervading everything, is the power that cuts away the three impurities from within the practitioner. As verse 1371 says, the sixty-four saktis who bring her grace to the practitioner surround him where he stands, and, as verse 1376 says, hold lotus flowers in many ways in their two blossomed hands. The Goddess herself is the very fruit of the seed mantra 'Srim' in the Navakshari Chakra, which the practitioners who, aided by the grace of these saktis, carry on their sadhana with excellence, worship and praise.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திலும் பரவி விரிந்திருக்கும் இறைவி, சாதகருக்குள்ளிருந்து அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற சக்தியாக இருக்கிறாள்.
The Goddess, who is spread out and pervading everything, is the power that cuts away the three impurities from within the practitioner.
- வரி 2Line 2
பாடல் #1371 இல் சொன்னபடி, அவளது அருளைச் சாதகர்க்குக் கொணர்ந்து கொடுக்கின்ற அறுபத்துநான்கு சக்திகளும், சாதகர் இருக்கும் நிலையில் அவரைச் சூழ்ந்திருந்து,
As verse 1371 says, the sixty-four saktis who bring her grace to the practitioner surround him where he stands,
- வரி 3Line 3
பாடல் #1376 இல் சொன்னபடி மலர்ந்திருக்கும் தமது இரு கைகளிலும் தாமரை மலர்களைப் பல வகைகளில் ஏந்திக்கொண்டிருக்கிறார்கள்.
and, as verse 1376 says, hold lotus flowers in many ways in their two blossomed hands.
- வரி 4Line 4
இவர்களின் அருளால் தம் சாதகத்தைச் சிறப்பாகச் செய்கின்ற சாதகர்கள் போற்றி வணங்குகின்ற, நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ என்னும் பீஜ மந்திரத்தின் பலனாகவே இறைவி இருக்கிறாள்.
The Goddess herself is the very fruit of the seed mantra 'Srim' in the Navakshari Chakra, which the practitioners who, aided by the grace of these saktis, carry on their sadhana with excellence, worship and praise.
திருமந்திரம் பாடல் #1378





