திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1379

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தனமது வாகிய தையலை நோக்கிமனமது வோடி மறிக்கிலோ ராண்டிற்கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்தினகர னாரிடச் செய்தி யதாமே.

உரை

பாடல் #1378 இல் சொன்னபடி, நவாக்கிரி சக்கரத்தோடு ஒன்றியிருந்து, அதிலுள்ள பீஜ மந்திரங்களின் பலனை அளிக்கும் சக்தியாகிய இறைவியை மட்டும் நினைத்துக்கொண்டு, மனத்தில் இருக்கும் மற்ற எண்ணங்கள் அனைத்தும் நீங்கும்படி செய்து, எண்ணங்கள் அற்ற நிலையில் தியானத்தில் இருந்தால், பிறவிக்குப் பாரமான அனைத்துமே சாதகரை விட்டு நீங்கிவிடும். அதன்பிறகு, இறைவியையே எண்ணித் தியானத்தில் இருந்த சாதகரின் நெஞ்சத்தில், மாயையாகிய இருளை நீக்கிவிடும் சூரியனைப் போலப் பேரொளியுடன் இறைவன் வந்து தமது திருவடியை வைத்து அருள்வார். நவாக்கிரி சக்கரத்தின் இயல்பே இதுவாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1378 இல் சொன்னபடி, நவாக்கிரி சக்கரத்தோடு ஒன்றியிருந்து, அதிலுள்ள பீஜ மந்திரங்களின் பலனை அளிக்கும் சக்தியாகிய இறைவியை மட்டும் நினைத்துக்கொண்டு,

  • வரி 2

    மனத்தில் இருக்கும் மற்ற எண்ணங்கள் அனைத்தும் நீங்கும்படி செய்து, எண்ணங்கள் அற்ற நிலையில் தியானத்தில் இருந்தால், பிறவிக்குப் பாரமான அனைத்துமே சாதகரை விட்டு நீங்கிவிடும்.

  • வரி 3

    அதன்பிறகு, இறைவியையே எண்ணித் தியானத்தில் இருந்த சாதகரின் நெஞ்சத்தில், மாயையாகிய இருளை நீக்கிவிடும் சூரியனைப் போலப் பேரொளியுடன் இறைவன் வந்து தமது திருவடியை வைத்து அருள்வார்.

  • வரி 4

    நவாக்கிரி சக்கரத்தின் இயல்பே இதுவாகும்.

திருமந்திரம் பாடல் #1379

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout