திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1380

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்போகின்ற பூரண மாக நிறைந்தபின்சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

உரை

நவாக்கிரி சக்கரத்தின் சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரின் மூலாதாரத்திலிருந்து எழுந்து மேலே வருகின்ற முழுமையான ஜோதி வடிவான சக்தி, சாதகரிடமிருந்து வெளிப்படும்போது மிகப்பெரும் ஒளியாக விரிந்து, நவாக்கிரி சக்கரத்தின் சக்தியே பேரொளியான மலராக மாறுகிறது. அது சென்று பரவுகின்ற இடமெல்லாம் பரிபூரணமாக முழுவதுமாக நிறைகிறது. அதன்பிறகு, பேரொளியான அந்த மலரில் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இந்தச் சக்தி, அனைத்து உயிர்களும் சென்று சேர்கின்ற, நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலமாகவே ஆகிவிடுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    நவாக்கிரி சக்கரத்தின் சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரின் மூலாதாரத்திலிருந்து எழுந்து மேலே வருகின்ற முழுமையான ஜோதி வடிவான சக்தி,

  • வரி 2

    சாதகரிடமிருந்து வெளிப்படும்போது மிகப்பெரும் ஒளியாக விரிந்து, நவாக்கிரி சக்கரத்தின் சக்தியே பேரொளியான மலராக மாறுகிறது.

  • வரி 3

    அது சென்று பரவுகின்ற இடமெல்லாம் பரிபூரணமாக முழுவதுமாக நிறைகிறது.

  • வரி 4

    அதன்பிறகு, பேரொளியான அந்த மலரில் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இந்தச் சக்தி, அனைத்து உயிர்களும் சென்று சேர்கின்ற, நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலமாகவே ஆகிவிடுகிறது.

திருமந்திரம் பாடல் #1380

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout