திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1381

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற மண்டலத் துள்ளே யமைந்தவளாகின்ற வத்தனி நாயகி யானவளாகின்ற வைம்பத் தறுசத்தி நேர்தருவாகின்ற வைம்பத் தறுவகை சூழவே.

உரை

பாடல் #1380 இல் சொன்னபடி, தனக்குள் இருக்கும் சக்தியால் உயிர்களை ஈர்த்து நன்மை செய்யும் நெருப்பு மண்டலத்தின் நடுவில் வீற்றிருக்கும் இறைவியே, அந்த மண்டலமாகவும், தனி ஒருவளான தலைவியாகவும் இருக்கிறாள். பாடல் #1371 இல் சொன்னபடி, இறைவியின் அம்சமாக எட்டு வகையாகவும் வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்துநான்கு சக்திகள் இருக்கின்றார்கள். இவர்களுள் எட்டு சக்திகள் இறைவியோடு நேரடியாகச் சேர்ந்திருக்க, மீதமுள்ள ஐம்பத்தாறு சக்திகளும் இறைவிக்கு நிகரான அருளைத் தருபவர்களாக அவளைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1380 இல் சொன்னபடி, தனக்குள் இருக்கும் சக்தியால் உயிர்களை ஈர்த்து நன்மை செய்யும் நெருப்பு மண்டலத்தின் நடுவில் வீற்றிருக்கும் இறைவியே,

  • வரி 2

    அந்த மண்டலமாகவும், தனி ஒருவளான தலைவியாகவும் இருக்கிறாள்.

  • வரி 3

    பாடல் #1371 இல் சொன்னபடி, இறைவியின் அம்சமாக எட்டு வகையாகவும் வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்துநான்கு சக்திகள் இருக்கின்றார்கள்.

  • வரி 4

    இவர்களுள் எட்டு சக்திகள் இறைவியோடு நேரடியாகச் சேர்ந்திருக்க, மீதமுள்ள ஐம்பத்தாறு சக்திகளும் இறைவிக்கு நிகரான அருளைத் தருபவர்களாக அவளைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

திருமந்திரம் பாடல் #1381

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout