தொடர்ந்து படிக்கread this section continuously
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாயாங்கணி முத்த மழகிய மேனியுந்தாங்கிரு கையவை தார்கிளி ஞானமாயேந்து கரங்க ளெடுத்தமா பாசமே.
உரைmeaning
பாடல் #1381 இல் சொன்னபடி, ஐம்பத்தாறு சக்திகளும் சூழ்ந்து நிற்க நடுவில் அமர்ந்திருக்கும் இறைவி, மேலெழுந்து பரவும் மாபெரும் ஜோதி வடிவில், அந்த ஜோதியின் சுடரையே தனது தலையாகவும் ஜோதியின் அடிப்பாகத்தையே தனது திருவடிகளாகவும் கொண்டிருக்கிறாள். ஜோதியின் நடுப்புறமே அணிகலனாகிய முத்துக்கள் போன்றும், பேரழகு பொருந்திய திருமேனியாகவும் கொண்டிருக்கிறாள். தனது இரு திருக்கரங்களில் மலர்க்கொத்தின்மேல் அமர்ந்திருக்கும் கிளியையும், உண்மையான ஞானத்தைத் தரும் சின் முத்திரையையும் தாங்கியிருக்கிறாள். மேல்நோக்கி ஏந்தியிருக்கும் தனது இரு திருக்கரங்களில், ஆணவத்தை அழிக்கும் அங்குசத்தையும் பாசத்தை அறுக்கும் கயிற்றையும் வைத்திருக்கிறாள்.
As the previous verse says, the Goddess, seated at the centre with the fifty-six saktis surrounding her, in a great form of light rising and spreading upward, holds the flame of that light itself as her head, and the base of that light as her sacred feet. She holds the middle portion of the light itself as though it were an ornament of pearls, and as her own body of great beauty. In two of her sacred hands she bears a parrot seated upon a spray of flowers and the wisdom-gesture that grants true knowledge. In her other two sacred hands, held upraised, she holds the goad that destroys ego and the noose that severs attachment.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1381 இல் சொன்னபடி, ஐம்பத்தாறு சக்திகளும் சூழ்ந்து நிற்க நடுவில் அமர்ந்திருக்கும் இறைவி, மேலெழுந்து பரவும் மாபெரும் ஜோதி வடிவில்,
As the previous verse says, the Goddess, seated at the centre with the fifty-six saktis surrounding her, in a great form of light rising and spreading upward,
- வரி 2Line 2
அந்த ஜோதியின் சுடரையே தனது தலையாகவும் ஜோதியின் அடிப்பாகத்தையே தனது திருவடிகளாகவும் கொண்டு, ஜோதியின் நடுப்புறமே அணிகலனாகிய முத்துக்கள் போன்றும் பேரழகு பொருந்திய திருமேனியாகவும் கொண்டிருக்கிறாள்.
holds the flame of that light itself as her head, and the base of that light as her sacred feet, and holds the middle portion of the light itself as though it were an ornament of pearls, and as her own body of great beauty.
- வரி 3Line 3
தனது இரு திருக்கரங்களில் மலர்க்கொத்தின்மேல் அமர்ந்திருக்கும் கிளியையும், உண்மையான ஞானத்தைத் தரும் சின் முத்திரையையும் தாங்கியிருக்கிறாள்.
In two of her sacred hands she bears a parrot seated upon a spray of flowers and the wisdom-gesture that grants true knowledge.
- வரி 4Line 4
மேல்நோக்கி ஏந்தியிருக்கும் தனது இரு திருக்கரங்களில், ஆணவத்தை அழிக்கும் அங்குசத்தையும் பாசத்தை அறுக்கும் கயிற்றையும் வைத்திருக்கிறாள்.
In her other two sacred hands, held upraised, she holds the goad that destroys ego and the noose that severs attachment.
திருமந்திரம் பாடல் #1382





