தொடர்ந்து படிக்கread this section continuously
பாசம தாகிய வேரை யறுத்திட்டுநேசம தாக நினைந்திடு மும்முளேநாசம தெல்லா நடந்திடு மையாண்டிற்காசினி மேலமர் கண்ணுத லாகுமே.
உரைmeaning
பாடல் #1382 இல் சொன்னபடி, இறைவி தனது திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாசம் என்னும் கயிறாகிய உலகப் பற்றுக்களை வேரோடு அறுத்தெறிந்துவிட்டு, உண்மையான அன்பையே சிவமாக நினைத்துக்கொண்டு, சாதகர் தமக்குள் அந்த அன்பையே வைத்துத் தியானத்தில் இருக்க வேண்டும். இப்படித் தியானத்தில் இருந்தால், தீமையென உலகில் இருக்கும் அனைத்துமே சாதகரை விட்டு விலகிவிடும். அதன்பிறகு, பூமிக்கு மேலாக அமர்ந்திருக்கும் சாதகர், ஞானக் கண்ணை நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே ஆகிவிடுவார்.
As the previous verse says, one must cut away at the very root and cast off the world's attachments, the noose that is the Goddess's own pasha held in her sacred hands, and, holding true love itself to be Shiva, keep that love within oneself and remain in meditation. If one remains thus in meditation, everything that is evil in this world will depart from the practitioner. After that, the practitioner, seated as though above the earth, will himself become Shiva, who bears the eye of wisdom upon his forehead.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1382 இல் சொன்னபடி, இறைவி தனது திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாசம் என்னும் கயிறாகிய உலகப் பற்றுக்களை வேரோடு அறுத்தெறிந்துவிட்டு,
As the previous verse says, one must cut away at the very root and cast off the world's attachments, the noose that is the Goddess's own pasha held in her sacred hands,
- வரி 2Line 2
உண்மையான அன்பையே சிவமாக நினைத்துக்கொண்டு, சாதகர் தமக்குள் அந்த அன்பையே வைத்துத் தியானத்தில் இருக்க வேண்டும்.
and, holding true love itself to be Shiva, keep that love within oneself and remain in meditation.
- வரி 3Line 3
இப்படித் தியானத்தில் இருந்தால், தீமையென உலகில் இருக்கும் அனைத்துமே சாதகரை விட்டு விலகிவிடும்.
If one remains thus in meditation, everything that is evil in this world will depart from the practitioner.
- வரி 4Line 4
அதன்பிறகு, பூமிக்கு மேலாக அமர்ந்திருக்கும் சாதகர், ஞானக் கண்ணை நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே ஆகிவிடுவார்.
After that, the practitioner, seated as though above the earth, will himself become Shiva, who bears the eye of wisdom upon his forehead.
திருமந்திரம் பாடல் #1383





