தொடர்ந்து படிக்கread this section continuously
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழிபண்ணுயர் நாதம் பகையற நின்றிடில்விண்ணமர் சோதி விளங்கிடி றீங்காரமண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
உரைmeaning
பாடல் #1383 இல் சொன்னபடி, நெற்றியில் ஞானக் கண் உடைய இறைவியின் திருவருளால் அருளப்பட்ட வழியில் நடந்து, இசைகளிலெல்லாம் உயர்வான நாதமாகிய இறைவனை அடைவதற்குத் தடையான அகங்கார எண்ணங்கள் இல்லாமல் தமக்குள் வைத்திருந்தால், விண்ணுலகில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவன் தமக்குள் வீற்றிருக்கும்படி சாதகர் வைத்து, ‘ஹ்ரீம்’ என்னும் பீஜத்திலேயே தியானித்திருந்தால், பூமியை உடைய இறைவியின் சக்தி மண்டலமாகவே சாதகரைச் சுற்றி இருக்கும்.
As the previous verse says, if one walks the path granted by the grace of the Goddess who bears the eye of wisdom on her forehead, keeping the mind free of the ego-thoughts that stand as a hindrance to reaching the Lord, who is the Nadam exalted above all music, and, setting the Lord's own great light, who is seated in the heavenly world, to be seated within oneself, remains in meditation upon the seed syllable 'Hreem', then the sakti-mandala of the Goddess who bears the earth will stand around the practitioner.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1383 இல் சொன்னபடி, நெற்றியில் ஞானக் கண் உடைய இறைவியின் திருவருளால் அருளப்பட்ட வழியில் நடந்து,
As the previous verse says, if one walks the path granted by the grace of the Goddess who bears the eye of wisdom on her forehead,
- வரி 2Line 2
இசைகளிலெல்லாம் உயர்வான நாதமாகிய இறைவனை அடைவதற்குத் தடையான அகங்கார எண்ணங்கள் இல்லாமல் தமக்குள் வைத்திருந்தால்,
keeping the mind free of the ego-thoughts that stand as a hindrance to reaching the Lord, who is the Nadam exalted above all music,
- வரி 3Line 3
விண்ணுலகில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவன் தமக்குள் வீற்றிருக்கும்படி சாதகர் வைத்து, ‘ஹ்ரீம்’ என்னும் பீஜத்திலேயே தியானித்திருந்தால்,
and, setting the Lord's own great light, who is seated in the heavenly world, to be seated within oneself, remains in meditation upon the seed syllable 'Hreem',
- வரி 4Line 4
பூமியை உடைய இறைவியின் சக்தி மண்டலமாகவே சாதகரைச் சுற்றி இருக்கும்.
then the sakti-mandala of the Goddess who bears the earth will stand around the practitioner.
திருமந்திரம் பாடல் #1384





