தொடர்ந்து படிக்கread this section continuously
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்விண்டகத் துள்ளே விளங்கி வருதலாற்றண்டகத் துள்ளவை தாங்கலு மாகுமே.
உரைmeaning
பாடல் #1384 இல் சொன்னபடி, சாதகரைச் சுற்றி இருக்கும் சக்தி மண்டலத்திற்குள்ளிருந்து மலரைப் போல் விரிந்தெழும் தீபத்தைத் தரிசித்து, அதைத் தமக்குள் வைத்து, அந்த தீபமும் தானும் வேறல்ல என்னும் எண்ணத்திலேயே தியானத்தில் இருந்தால், பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தில் இருக்கும் அனைத்துத் தத்துவங்களும் தமக்குள்ளேயே தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி கிடைக்கும். அதன்பிறகு, சாதகரின் உடலுக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சிவரை இருக்கும் இடத்திற்குள்ளேயே, பரந்து விரிந்திருக்கும் அந்த ஆகாயத்தில் உள்ள அனைத்தையும் தாங்கிக்கொண்டு வீற்றிருக்கும் இயல்பை சாதகர் அடைந்துவிடுவார்.
As the previous verse says, if one beholds the lamp that blossoms up like a flower from within the sakti-mandala surrounding the practitioner, holds it within oneself, and remains in meditation in the very thought that this lamp and oneself are not different, all the tattvas present in that vast, spreading sky will come to be understood clearly within oneself. After that, the practitioner will attain the nature of holding, within the very space that runs from the base to the crown along the sushumna nadi at the centre of the body, everything present in that vast, spreading sky.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1384 இல் சொன்னபடி, சாதகரைச் சுற்றி இருக்கும் சக்தி மண்டலத்திற்குள்ளிருந்து மலரைப் போல் விரிந்தெழும் தீபத்தைத் தரிசித்து, அதைத் தமக்குள் வைத்து,
As the previous verse says, if one beholds the lamp that blossoms up like a flower from within the sakti-mandala surrounding the practitioner, and holds it within oneself,
- வரி 2Line 2
அந்த தீபமும் தானும் வேறல்ல என்னும் எண்ணத்திலேயே தியானத்தில் இருந்தால்,
and remains in meditation in the very thought that this lamp and oneself are not different,
- வரி 3Line 3
பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தில் இருக்கும் அனைத்துத் தத்துவங்களும் தமக்குள்ளேயே தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி கிடைக்கும்.
all the tattvas present in that vast, spreading sky will come to be understood clearly within oneself.
- வரி 4Line 4
அதன்பிறகு, சாதகரின் உடலுக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சிவரை இருக்கும் இடத்திற்குள்ளேயே, பரந்து விரிந்திருக்கும் அந்த ஆகாயத்தில் உள்ள அனைத்தையும் தாங்கிக்கொண்டு வீற்றிருக்கும் இயல்பை சாதகர் அடைந்துவிடுவார்.
After that, the practitioner will attain the nature of holding, within the very space that runs from the base to the crown along the sushumna nadi at the centre of the body, everything present in that vast, spreading sky.
திருமந்திரம் பாடல் #1385





