தொடர்ந்து படிக்கread this section continuously
தாங்கிய நாவித் தடமலர் மண்டலத்தோங்கி யெழுங்கலைக் குள்ளுணர் வானவளேங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திடவாங்கிய னாதம் வலியுட னாகுமே.
உரைmeaning
பாடல் #1385 இல் சொன்னபடி, பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தில் உள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே தாங்கியிருக்கும் சாதகரின் தொப்புள்கொடியில் இருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின் தாமரை மலர் போன்ற மண்டலத்திலிருந்து வேகமாக மேலெழுந்துவரும் நவாக்கிரி சக்கரத்தின் கலைக்குள்ளிருக்கும் உணர்வு வடிவமான இறைவியை, இனிமேல் வரும் பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோம் என ஏங்கியிருந்து, வரும் பிறப்புகள் அனைத்தையும் இறைவியையே எண்ணி அறுத்திடவேண்டும். அதன்பிறகு, பாடல் #1383 இல் சொன்னபடி சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த நாத வடிவான இறைவன் மிகவும் வலிமையுடன் வீற்றிருப்பார்.
As the previous verse says, one who yearns to know when future births will cease and be reached, beholding the Goddess in the form of feeling within the fibre of the Navakshari Chakra that rises up swiftly from the lotus-like mandala of the manipuraka chakra at the practitioner's navel cord, one who holds within all that is present in the vast, spreading sky, must cut off all births to come by thinking only of the Goddess. After that, as verse 1383 says, the Lord in the form of Nadam, whom the practitioner had held within as the form of supreme love, will stand established with great strength.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1385 இல் சொன்னபடி, பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தில் உள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே தாங்கியிருக்கும் சாதகரின் தொப்புள்கொடியில் இருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின் தாமரை மலர் போன்ற மண்டலத்திலிருந்து வேகமாக மேலெழுந்துவரும் நவாக்கிரி சக்கரத்தின் கலைக்குள்ளிருக்கும் உணர்வு வடிவமான இறைவியை,
As the previous verse says, one who beholds the Goddess in the form of feeling within the fibre of the Navakshari Chakra that rises up swiftly from the lotus-like mandala of the manipuraka chakra at the practitioner's navel cord, one who holds within all that is present in the vast, spreading sky,
- வரி 2Line 2
இனிமேல் வரும் பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோம் என ஏங்கியிருந்து,
yearning to know when future births will cease and be reached,
- வரி 3Line 3
வரும் பிறப்புகள் அனைத்தையும் இறைவியையே எண்ணி அறுத்திடவேண்டும்.
must cut off all births to come by thinking only of the Goddess.
- வரி 4Line 4
அதன்பிறகு, பாடல் #1383 இல் சொன்னபடி சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த நாத வடிவான இறைவன் மிகவும் வலிமையுடன் வீற்றிருப்பார்.
After that, as verse 1383 says, the Lord in the form of Nadam, whom the practitioner had held within as the form of supreme love, will stand established with great strength.
திருமந்திரம் பாடல் #1386





