திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1387

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நாவுக்கு நாயகி நன்மணிப் பூணாரம்பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாள்பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தளாவுக்கு நாயகி யங்கமர்ந் தாளே.

உரை

நாவுக்குத் தலைவியான இறைவி நல்ல நவரத்தினங்களைப் பதித்திருக்கும் மாலையை அணிந்திருக்கிறாள். மலர் வடிவான சக்கரத்திற்குத் தலைவியான இறைவி, தலைமுடியிலிருந்து கீழ்வரை தங்கம் போலத் தகதகக்கும் ஆடையை அணிந்திருக்கிறாள். பாடல்களுக்குத் தலைவியான இறைவி பாலைப் போன்ற வெண்மையான நிறம் கொண்டிருக்கிறாள். ஆன்மாவிற்குத் தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    நாவுக்குத் தலைவியான இறைவி நல்ல நவரத்தினங்களைப் பதித்திருக்கும் மாலையை அணிந்திருக்கிறாள்.

  • வரி 2

    மலர் வடிவான சக்கரத்திற்குத் தலைவியான இறைவி, தலைமுடியிலிருந்து கீழ்வரை தங்கம் போலத் தகதகக்கும் ஆடையை அணிந்திருக்கிறாள்.

  • வரி 3

    பாடல்களுக்குத் தலைவியான இறைவி பாலைப் போன்ற வெண்மையான நிறம் கொண்டிருக்கிறாள்.

  • வரி 4

    ஆன்மாவிற்குத் தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1387

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout