திருமூலர் அருளிய திருமந்திரம்
12. புவனாபதி சக்கரம்

நான்காம் தந்திரம் பாடல் 1307–1318 (12 பாடல்கள்)

ககராதி யோரைந்துங் காணிய பொன்மையகராதி யோரக் கரத்தமே போலுஞ்சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மைமகராதி மூவித்தை காமிய முத்தியே.

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

ஏகப் பராசத்தி யீசற்கா மங்கமேயாகப் பராவித்தை யாமுத்தி சித்தியேயேகப் பராசத்தி யாகச் சிவகுருயோகப் பராசத்தி யுண்மை யெட்டாமே.

எட்டா கியசத்தி யெட்டாகும் யோகத்துக்கட்டாகி நாதாந்தத் தெட்டுங் கலப்பித்தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்துகிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

ஏதும் பலமா மியந்திரா சன்னடியோதிக் குருவி னுபதேச முட்கொண்டுநீதங்கு மங்க நியாசந் தனைப்பண்ணிச்சாதங் கெடச்செம்பிற் சட்கோணந் தானிடே.

சட்கோணம் தன்னிற் சிரீயிரீ தானிட்டுவக்கோண மாறின் றலையிலிரீங் காரமிட்டெக்கோண முஞ்சூழெ ழில்வட்ட மிட்டுப்பின்மிக்கீரெட் டக்கர மம்முதல் மேலிடே.

இட்ட விதழ்க ளிடையந் தரத்திலேயட்ட வாவிட்டதின் மேலே யுவ்விட்டுக்கிட்ட விதழ்களின் மேலே குரோஞ்சுரோம்விட்ட வாமாத்தாங் குரோங்கென்று மேவிடே.

மேவிய சக்கர மீது வலத்திலேகோவை யடைவே குரோங்சுரோங் கென்றிட்டுத்தாவிலீறீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்துபூவை புவனா பதியைப்பின் பூசியே.

பூசிக்கும் போது புவனாபதி தன்னையாசற் றகத்தினி லாவாகனம் பண்ணிப்பேசிப் பிராணப் பிரதிட்டை யதுசெய்துதேசுற் றிடவே தியான மதுசெய்யே.

செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்கையிற் படையங்குச பாசத் தோடவைமெய்யி லணிகல னிரற்றின மாமேனிதுய்ய முடியு மவையத்தின் ரோற்றமே.

தோற்போர்வை நீகத் துதித்தடைவிற் பூசித்துப்பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்திநாற்பாய னாரதா யாசுவா காவென்றுச்சீற்பாகச் சேடத்தை மாற்றிப் பின்சீவியே.

சீவிப் பதன்முன்னே தேவியையுத் துவாகனத்தாற்பாவித் திதைய கமலத்தே பதிவித்தங்கியாவற்கு மெட்டா வியந்திர ராசனைநீவைத்துச் சேமி நினைந்தெதுந் தருமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1307

1 / 12

0:000:00
12. புவனாபதி சக்கரம்பாடல் 1307

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com