தொடர்ந்து படிக்கread this section continuously
செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்கையிற் படையங்குச பாசத் தோடவைமெய்யி லணிகல னிரற்றின மாமேனிதுய்ய முடியு மவையத்தின் ரோற்றமே.
உரைmeaning
பாடல் #1315 இல் உள்ளபடி பூஜை செய்தால், இறைவனுடன் சேர்ந்திருக்கும் இறைவியானவள் தனது திருமேனியில் செம்மையான பட்டு போல் பிரகாசிக்கும் உடையை அணிந்துகொண்டு, தனது திருக்கரங்களில் ஆசையை அடக்கி அருளும் அங்குசமும் உலகப் பற்றை அறுத்து அருளும் பாசக் கயிறும் தரித்துக்கொண்டு, நவரத்தினங்கள் போல் பிரகாசிக்கும் தனது திருமேனியில் நகைகளை அணிந்துகொண்டு, தமது தலையில் தூய்மையான திருமுடியையும் (கிரீடம்) அணிந்துகொண்டு, சாதகரின் முன்பு உலகத்தின் அதிபதியாகிய தோற்றமாகவே வந்து நிற்பாள்.
As verse 1315 says, if worship is offered so, the Goddess who is joined with the Lord comes and stands before the practitioner in the very form of the master of the world: on her sacred body she wears a garment shining like fine silk, in her sacred hands she bears the goad that graciously subdues desire and the noose that graciously severs worldly attachment, on her sacred body, shining like nine gems, she wears her ornaments, and on her head she wears her pure sacred crown.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1315 இல் உள்ளபடி பூஜை செய்தால், இறைவனுடன் சேர்ந்திருக்கும் இறைவியானவள் தனது திருமேனியில் செம்மையான பட்டு போல் பிரகாசிக்கும் உடையை அணிந்துகொள்வாள்.
As verse 1315 says, if worship is offered so, the Goddess who is joined with the Lord wears on her sacred body a garment shining like fine silk.
- வரி 2Line 2
தனது திருக்கரங்களில் ஆசையை அடக்கி அருளும் அங்குசமும் உலகப் பற்றை அறுத்து அருளும் பாசக் கயிறும் தரித்துக்கொள்வாள்.
In her sacred hands she bears the goad that graciously subdues desire and the noose that graciously severs worldly attachment.
- வரி 3Line 3
நவரத்தினங்கள் போல் பிரகாசிக்கும் தனது திருமேனியில் நகைகளை அணிந்து, தமது தலையில் தூய்மையான திருமுடியையும் அணிந்துகொள்வாள்.
On her sacred body, shining like nine gems, she wears her ornaments, and on her head she wears her pure sacred crown.
- வரி 4Line 4
இவ்வாறு அணிந்து, சாதகரின் முன்பு உலகத்தின் அதிபதியாகிய தோற்றமாகவே வந்து நிற்பாள்.
Thus adorned, she comes and stands before the practitioner in the very form of the master of the world.
திருமந்திரம் பாடல் #1316





