திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1315

நான்காம் தந்திரம்12. புவனாபதி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பூசிக்கும் போது புவனாபதி தன்னையாசற் றகத்தினி லாவாகனம் பண்ணிப்பேசிப் பிராணப் பிரதிட்டை யதுசெய்துதேசுற் றிடவே தியான மதுசெய்யே.

உரை

பாடல் #1314 இல் உள்ளபடி புவனாபதி சக்கரத்தை முறைப்படி வரைந்து அதற்குப் பூஜைகள் செய்யும்போது, உலகங்களுக்கு அதிபதியாக இருக்கும் இறைவனையும் இறைவியையும் சாதகர் தமது மனத்தில் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் தூய்மையான மனத்துள் மனத்தாலேயே, வெளியில் இருக்கும் புவனாபதி சக்கரத்தின் ஆற்றலை உள்ளுக்குள் வரும்படி செய்யவேண்டும். அதன்பின் சக்கரத்திலுள்ள மந்திர பீஜங்களை மனத்துள் ஓதி, முறைப்படி அதற்குள் உயிர் நிலைபெறச் செய்து தமக்குள் வைக்கவேண்டும். அதன்பின் இறையின் பேரொளி பொருந்திய ஆற்றலை, மனத்துள் வைத்த சக்கரத்தோடு ஒன்றாகப் பொருந்தும்படி செய்து முறைப்படி தியானம் செய்யவேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1314 இல் உள்ளபடி புவனாபதி சக்கரத்தை முறைப்படி வரைந்து அதற்குப் பூஜைகள் செய்யும்போது, தூய்மையான மனத்துள் மனத்தாலேயே புவனாபதி சக்கரத்தின் ஆற்றலை உள்ளுக்குள் வரும்படி செய்யவேண்டும்.

  • வரி 2

    இவ்வாறு உலகங்களுக்கு அதிபதியாக இருக்கும் இறைவனையும் இறைவியையும் தமக்குள் அழைத்துக்கொள்ளவேண்டும்.

  • வரி 3

    அதன்பின் சக்கரத்திலுள்ள மந்திர பீஜங்களை மனத்துள் ஓதி, முறைப்படி அதற்குள் உயிர் நிலைபெறச் செய்து தமக்குள் வைக்கவேண்டும்.

  • வரி 4

    அதன்பின் இறையின் பேரொளி பொருந்திய ஆற்றலை, மனத்துள் வைத்த சக்கரத்தோடு ஒன்றாகப் பொருந்தும்படி செய்து முறைப்படி தியானம் செய்யவேண்டும்.

திருமந்திரம் பாடல் #1315

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout