திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1314

நான்காம் தந்திரம்12. புவனாபதி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மேவிய சக்கர மீது வலத்திலேகோவை யடைவே குரோங்சுரோங் கென்றிட்டுத்தாவிலீறீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்துபூவை புவனா பதியைப்பின் பூசியே.

உரை

பாடல் #1313 இல் வரையப்பட்ட, இறைவனது கோயிலாக இருக்கும் இந்தப் புவனாபதி சக்கரத்தைச் சுற்றி, நான்கு வாசல்கள் வைத்து அடைத்திருக்கும்படி இரண்டு வரிகள் கொண்ட ஒரு கட்டத்தை வரைந்து, அதில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இரு பீஜ எழுத்துக்களை எழுதவேண்டும். பின்னர் தாமரைப் பூ போன்ற வடிவத்தில் ஒரு பீஜ எழுத்தை மறுபடியும் மறுபடியும் சக்கரத்தை முழுவதுமாகச் சுற்றி இருக்கும்படி எழுதவேண்டும். பாடல் #1311 முதல் இப்பாடல் வரை கொடுக்கப்பட்ட முறைகளின்படி வரையப்பட்ட பிறகு, தாமரைப் பூப் போலவே இருக்கும், உலகங்களுக்கு அதிபதியாகச் சேர்ந்திருக்கும் இறைவன் இறைவியின் இந்தப் புவனாபதி சக்கரத்தைப் பூஜை செய்யவேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1313 இல் வரையப்பட்ட, இறைவனது கோயிலாக இருக்கும் இந்தப் புவனாபதி சக்கரத்தைச் சுற்றி, நான்கு வாசல்கள் வைத்து அடைத்திருக்கும்படி இரண்டு வரிகள் கொண்ட ஒரு கட்டத்தை வரையவேண்டும்.

  • வரி 2

    அதில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இரு பீஜ எழுத்துக்களை எழுதவேண்டும்.

  • வரி 3

    பின்னர் தாமரைப் பூ போன்ற வடிவத்தில் ஒரு பீஜ எழுத்தை மறுபடியும் மறுபடியும் சக்கரத்தை முழுவதுமாகச் சுற்றி இருக்கும்படி எழுதவேண்டும்.

  • வரி 4

    பாடல் #1311 முதல் இப்பாடல் வரை கொடுக்கப்பட்ட முறைகளின்படி வரையப்பட்ட பிறகு, தாமரைப் பூப் போலவே இருக்கும், உலகங்களுக்கு அதிபதியாகச் சேர்ந்திருக்கும் இறைவன் இறைவியின் இந்தப் புவனாபதி சக்கரத்தைப் பூஜை செய்யவேண்டும்.

திருமந்திரம் பாடல் #1314

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout