திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1313

நான்காம் தந்திரம்12. புவனாபதி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இட்ட விதழ்க ளிடையந் தரத்திலேயட்ட வாவிட்டதின் மேலே யுவ்விட்டுக்கிட்ட விதழ்களின் மேலே குரோஞ்சுரோம்விட்ட வாமாத்தாங் குரோங்கென்று மேவிடே.

உரை

பாடல் #1312 இல் வரையப்பட்ட பதினாறு அட்சர எழுத்துக்களைக் கொண்ட வட்டத்தைச் சுற்றி எட்டு இதழ்களை வரைந்து, அந்த இதழ்களின் நடுவே இருக்கும் வெற்றிடத்தில் எட்டு முறை ஓர் எழுத்தை, அதற்கு மேல் இன்னோர் எழுத்தைச் சேர்த்து எழுதவேண்டும். இப்படி நெருக்கமாக வரையப்பட்ட எட்டு இதழ்களுக்குள் அவை அமர்ந்திருக்கும் வட்டத்திற்கு மேல், இதழ்களை ஒட்டியவாறு இரு பீஜ எழுத்துக்களை எழுதிவிட்டு, அந்த இதழ்களுக்கு மேலும் இணைப் பீஜ எழுத்துக்களை எழுதவேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1312 இல் வரையப்பட்ட பதினாறு அட்சர எழுத்துக்களைக் கொண்ட வட்டத்தைச் சுற்றி எட்டு இதழ்களை வரைய வேண்டும்.

  • வரி 2

    அந்த இதழ்களின் நடுவே இருக்கும் வெற்றிடத்தில் எட்டு முறை ஓர் எழுத்தை, அதற்கு மேல் இன்னோர் எழுத்தைச் சேர்த்து எழுதவேண்டும்.

  • வரி 3

    இப்படி நெருக்கமாக வரையப்பட்ட எட்டு இதழ்களுக்குள் அவை அமர்ந்திருக்கும் வட்டத்திற்கு மேல், இதழ்களை ஒட்டியவாறு இரு பீஜ எழுத்துக்களை எழுதவேண்டும்.

  • வரி 4

    அந்த இதழ்களுக்கு மேலும் இணைப் பீஜ எழுத்துக்களை எழுதவேண்டும்.

திருமந்திரம் பாடல் #1313

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout