தொடர்ந்து படிக்கread this section continuously
சட்கோணம் தன்னிற் சிரீயிரீ தானிட்டுவக்கோண மாறின் றலையிலிரீங் காரமிட்டெக்கோண முஞ்சூழெ ழில்வட்ட மிட்டுப்பின்மிக்கீரெட் டக்கர மம்முதல் மேலிடே.
உரைmeaning
பாடல் #1311 இல் கூறியவாறு வரையப்பட்ட செப்புத் தகட்டில், இரண்டு பெரிய முக்கோணங்களால் அமைந்த ஆறு கோணங்களின் நடுவே இரண்டு பீஜ எழுத்துக்களை எழுத வேண்டும். அந்த ஆறு கோணங்களின் ஒவ்வொரு முனையிலும் மற்றோர் பீஜ எழுத்தை எழுத வேண்டும். இந்த ஆறு கோணங்களையும் சூழ்ந்திருக்கும்படி ஓர் அழகிய வட்டமாக வரையவேண்டும். அந்த வட்டத்திற்கு மேலே, பதினாறு உயிர் எழுத்துக்களைச் சுற்றிலும் எழுதவேண்டும்.
On the copper plate drawn as verse 1311 says, two seed syllables must be written in the middle of the six corners formed by the two large triangles. Another seed syllable must be written at each of the six corner-tips. A beautiful circle must be drawn enclosing all six corners. And above that circle, sixteen vowel letters must be written all around it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1311 இல் கூறியவாறு வரையப்பட்ட செப்புத் தகட்டில், இரண்டு பெரிய முக்கோணங்களால் அமைந்த ஆறு கோணங்களின் நடுவே இரண்டு பீஜ எழுத்துக்களை எழுத வேண்டும்.
On the copper plate drawn as verse 1311 says, two seed syllables must be written in the middle of the six corners formed by the two large triangles.
- வரி 2Line 2
அந்த ஆறு கோணங்களின் ஒவ்வொரு முனையிலும் மற்றோர் பீஜ எழுத்தை எழுத வேண்டும்.
Another seed syllable must be written at each of the six corner-tips.
- வரி 3Line 3
இந்த ஆறு கோணங்களையும் சூழ்ந்திருக்கும்படி ஓர் அழகிய வட்டமாக வரையவேண்டும்.
A beautiful circle must be drawn enclosing all six corners.
- வரி 4Line 4
அந்த வட்டத்திற்கு மேலே, பதினாறு உயிர் எழுத்துக்களைச் சுற்றிலும் எழுதவேண்டும்.
And above that circle, sixteen vowel letters must be written all around it.
திருமந்திரம் பாடல் #1312





