திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1317

நான்காம் தந்திரம்12. புவனாபதி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தோற்போர்வை நீகத் துதித்தடைவிற் பூசித்துப்பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்திநாற்பாய னாரதா யாசுவா காவென்றுச்சீற்பாகச் சேடத்தை மாற்றிப் பின்சீவியே.

உரை

பாடல் #1316 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்திருக்கும் இறைவியானவள் சாதகரின் முன்பு தோன்றிய பின், தோலாலாகிய போர்வை போல் இருக்கும் உடம்பின் உணர்ச்சி நீங்கும் வரை போற்றி வணங்கவேண்டும். அதன்பின் தமது உள்ளத்திற்குள் இறைவியின் உருவத்தைப் பதியவைத்து, உள்ளே வீற்றிருக்கும் இறைவிக்கு மானசீகமாகப் பூஜைகள் செய்யவேண்டும். பூஜையின் பலனாக நான் எனும் பாலுணர்வு போன பின்பு, உள்ளிருந்து எழுந்துவரும் மந்திரத்தைச் செபித்துப் போற்றி வணங்கவேண்டும். பின்பு மனத்துள், 'நான்கு திசைகளையும் காத்தருள்பவளே, அனைத்து உயிர்களாலும் ஆராதிக்கப்படுபவளே, உனக்கு இந்த மந்திரத்தை அர்ப்பணிக்கின்றேன்' என்று நினைத்து, உருவமாக இருக்கும் இறைவியை அருவமாக மாற்றிச் சிறப்பான அருவமாகப் பாவித்துக்கொண்டு அவளையே போற்றி வணங்கவேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1316 இல் உள்ளபடி இறைவியானவள் தோன்றிய பின், தோலாலாகிய போர்வை போல் இருக்கும் உடம்பின் உணர்ச்சி நீங்கும் வரை போற்றி வணங்கவேண்டும்.

  • வரி 2

    அதன்பின் தமது உள்ளத்திற்குள் இறைவியின் உருவத்தைப் பதியவைத்து, உள்ளே வீற்றிருக்கும் இறைவிக்கு மானசீகமாகப் பூஜைகள் செய்யவேண்டும்.

  • வரி 3

    பூஜையின் பலனாக நான் எனும் பாலுணர்வு போன பின்பு, உள்ளிருந்து எழுந்துவரும் மந்திரத்தைச் செபித்துப் போற்றி வணங்கவேண்டும்.

  • வரி 4

    பின்பு மனத்துள் 'நான்கு திசைகளையும் காத்தருள்பவளே, அனைத்து உயிர்களாலும் ஆராதிக்கப்படுபவளே, உனக்கு இந்த மந்திரத்தை அர்ப்பணிக்கின்றேன்' என்று நினைத்து, உருவமாக இருக்கும் இறைவியை அருவமாக மாற்றிச் சிறப்பான அருவமாகப் பாவித்துக்கொண்டு அவளையே போற்றி வணங்கவேண்டும்.

திருமந்திரம் பாடல் #1317

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout