தொடர்ந்து படிக்கread this section continuously
சீவிப் பதன்முன்னே தேவியையுத் துவாகனத்தாற்பாவித் திதைய கமலத்தே பதிவித்தங்கியாவற்கு மெட்டா வியந்திர ராசனைநீவைத்துச் சேமி நினைந்தெதுந் தருமே.
உரைmeaning
பாடல் #1317 இல் உள்ளபடி போற்றி வணங்கும் சாதகர், தமக்கு முன்பு எண்ணத்தில் இருக்கும் இறைவியை மனத்தில் உறுதியோடு, உருவமாக இருக்கும் அவளை அருவமாக மாற்றிப் பாவித்து, இதயத் தாமரையில் நிலைபெறச் செய்யவேண்டும். அதன்பின், அவளின் நன்மை தரும் நெருப்பு உருவத்தோடு, எவருக்கும் எளிதில் கிடைக்காத புவனாபதி சக்கரத்தின் அதிபதியாகிய இறைவனையும் சேர்த்து வைக்கவேண்டும். இப்படிச் சேர்த்து வைத்திருக்கும் சக்கரத்திலிருந்து கிடைக்கும் சக்தியைச் சேமித்து வைத்தால், சாதகர் நினைத்தது எதுவாக இருந்தாலும் அதைப் புவனாபதி சக்கரம் தந்து அருளும்.
As verse 1317 says, the practitioner who worships in this way must hold, with firmness of mind, the Goddess who is now in his thought before him, turning her, who has a form, into the formless, and fix her in the lotus of the heart. After that, along with her fire-form that grants good, the Lord who is master of the Bhuvanapathi Chakra, not easily attained by anyone, must be joined and held there too. If the power that comes from this chakra so joined and held is thus preserved, then whatever the practitioner has desired, the Bhuvanapathi Chakra grants and gives it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1317 இல் உள்ளபடி போற்றி வணங்கும் சாதகர், தமக்கு முன்பு எண்ணத்தில் இருக்கும் இறைவியை மனத்தில் உறுதியோடு, உருவமாக இருக்கும் அவளை அருவமாக மாற்றிப் பாவித்து, இதயத் தாமரையில் நிலைபெறச் செய்யவேண்டும்.
As verse 1317 says, the practitioner who worships in this way must hold, with firmness of mind, the Goddess who is now in his thought before him, turning her, who has a form, into the formless, and fix her in the lotus of the heart.
- வரி 2Line 2
அதன்பின், அவளின் நன்மை தரும் நெருப்பு உருவத்தோடு, எவருக்கும் எளிதில் கிடைக்காத புவனாபதி சக்கரத்தின் அதிபதியாகிய இறைவனையும் சேர்த்து வைக்கவேண்டும்.
After that, along with her fire-form that grants good, the Lord who is master of the Bhuvanapathi Chakra, not easily attained by anyone, must be joined and held there too.
- வரி 3Line 3
இப்படிச் சேர்த்து வைத்திருக்கும் சக்கரத்திலிருந்து கிடைக்கும் சக்தியைச் சேமித்து வைக்கவேண்டும்.
The power that comes from this chakra so joined and held must be preserved.
- வரி 4Line 4
அப்படிச் செய்தால், சாதகர் நினைத்தது எதுவாக இருந்தாலும் அதைப் புவனாபதி சக்கரம் தந்து அருளும்.
If this is done, then whatever the practitioner has desired, the Bhuvanapathi Chakra grants and gives it.
திருமந்திரம் பாடல் #1318





