தொடர்ந்து படிக்கread this section continuously
ஏகப் பராசத்தி யீசற்கா மங்கமேயாகப் பராவித்தை யாமுத்தி சித்தியேயேகப் பராசத்தி யாகச் சிவகுருயோகப் பராசத்தி யுண்மை யெட்டாமே.
உரைmeaning
பாடல் #1308 இல் கூறியவாறு, சாதகர்கள் அறிந்துகொண்ட சிவ உருவமாக இருப்பவள் ஒன்றேயான பராசக்தியே. அவளே இறைவனுக்குச் சரிபாதி அங்கமாகவும் இருக்கின்றாள். தனது திருமேனியில், சாதகர்கள் அனுபவத்தில் உணரும் பராவித்தையாகவும், சாதகர்களுக்குக் கிடைக்கும் முக்தியாகவும், அவர்கள் அடையக்கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள். ஒன்றேயான அந்தப் பராசக்தியே, சாதகர்கள் காணும் குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள். சாதகர்கள் தமது யோகத்தால் அடையக்கூடிய எட்டு வகைச் சித்திகளில் இருக்கும் பேருண்மையின் எட்டு வகைச் சக்திகளாகவும் பராசக்தியே இருக்கின்றாள்.
As verse 1308 says, the form of Siva that practitioners come to know is the one and only Parashakti herself. She is the very half-body of the Lord. In her own sacred form she is the Para Vidya that practitioners sense in experience, the liberation that practitioners attain, and the siddhis that they may reach. That same one Parashakti is also the Lord as the guru whom practitioners behold. And among the eight kinds of siddhis attainable by their yoga, Parashakti herself is the eight kinds of power belonging to the supreme truth.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1308 இல் கூறியவாறு, சாதகர்கள் அறிந்துகொண்ட சிவ உருவமாக இருப்பவள் ஒன்றேயான பராசக்தியே; அவளே இறைவனுக்குச் சரிபாதி அங்கமாகவும் இருக்கின்றாள்.
As verse 1308 says, the form of Siva that practitioners come to know is the one and only Parashakti herself; she is the very half-body of the Lord.
- வரி 2Line 2
தனது திருமேனியில், சாதகர்கள் அனுபவத்தில் உணரும் பராவித்தையாகவும், சாதகர்களுக்குக் கிடைக்கும் முக்தியாகவும், அவர்கள் அடையக்கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள்.
In her own sacred form she is the Para Vidya that practitioners sense in experience, the liberation that practitioners attain, and the siddhis that they may reach.
- வரி 3Line 3
ஒன்றேயான அந்தப் பராசக்தியே, சாதகர்கள் காணும் குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள்.
That same one Parashakti is also the Lord as the guru whom practitioners behold.
- வரி 4Line 4
சாதகர்கள் தமது யோகத்தால் அடையக்கூடிய எட்டு வகைச் சித்திகளில் இருக்கும் பேருண்மையின் எட்டு வகைச் சக்திகளாகவும் பராசக்தியே இருக்கின்றாள்.
And among the eight kinds of siddhis attainable by their yoga, Parashakti herself is the eight kinds of power belonging to the supreme truth.
திருமந்திரம் பாடல் #1309





