திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1308

நான்காம் தந்திரம்12. புவனாபதி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

உரை

பாடல் #1307 இல் கூறியவாறு, சாதகர்கள் தமக்குள் ஆராய்ந்து அறிந்துகொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்துகொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இத்தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இத்தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்துகொண்டால், வேறொரு தெய்வமும் தேவையில்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தைக் கவனமாகக் கேளுங்கள்: சாதகர்கள் தமக்குள் மனத்தால் வருவித்துக்கொண்ட மூன்று கோணங்களைக் கொண்ட இந்தப் புவனாபதி சக்கரத்தில் தமது மனத்தை அசையாமல் வைத்துத் தியானித்தால், பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்துகொள்ள முடியும். அப்படி அறிந்துகொண்ட பின்பு, சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1307 இல் கூறியவாறு, சாதகர்கள் தமக்குள் ஆராய்ந்து அறிந்துகொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்துகொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இத்தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம்.

  • வரி 2

    இத்தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்துகொண்டால், வேறொரு தெய்வமும் தேவையில்லை; யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தைக் கவனமாகக் கேளுங்கள்.

  • வரி 3

    சாதகர்கள் தமக்குள் மனத்தால் வருவித்துக்கொண்ட மூன்று கோணங்களைக் கொண்ட இந்தப் புவனாபதி சக்கரத்தில் தமது மனத்தை அசையாமல் வைத்துத் தியானித்தால், பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அறிந்துகொள்ள முடியும்.

  • வரி 4

    அப்படி அறிந்துகொண்ட பின்பு, சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியும்.

திருமந்திரம் பாடல் #1308

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout