தொடர்ந்து படிக்கread this section continuously
ககராதி யோரைந்துங் காணிய பொன்மையகராதி யோரக் கரத்தமே போலுஞ்சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மைமகராதி மூவித்தை காமிய முத்தியே.
உரைmeaning
ககர எழுத்திற்கு (க) மூலமாக இருக்கும் ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தமக்குள் தரிசித்துப் பார்த்தால், அவை பொன் நிறத்தில் இருக்கும். அதுபோலவே, இரண்டாவது எழுத்தான அகர எழுத்திற்கு (அ) மூலமாக இருக்கும் ஓர் எழுத்துச் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதுபோலவே, மூன்றாவது எழுத்தான சகர எழுத்திற்கு (ச) மூலமாக இருக்கும் இருபது எழுத்துக்களும் தூய வெள்ளை நிறத்தில் இருக்கும். உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்கும் புவனாபதி சக்கரத்தில் இருக்கும் இந்த மூன்று எழுத்துக்களையும், அவற்றின் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மனத்துள் தரிசிக்கும் சாதகர்களுக்கு, ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வரும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கியிருக்கும் சுத்த வித்தையிலிருந்து, இந்த மூன்று எழுத்துக்களையும் ஞானமாக அறியும் அபர வித்தை கிடைக்கும்; பின்பு அதைத் தமக்குள்ளேயே அனுபவபூர்வமாக உணரும் பர வித்தையும் கிடைத்தால், ஆதியிலிருந்தே தம்மைத் தொடர்ந்து வரும் அனைத்துக் கர்ம வினைகளும் நீங்கி, முக்தியை இறையருளால் அடைவார்கள்.
If practitioners behold within themselves the five letters that have the letter "Ka" as their source, those letters appear golden in colour. Likewise, the single letter that has the second letter, "A", as its source appears red in colour. Likewise again, the twenty letters that have the third letter, "Sa", as their source appear pure white in colour. For practitioners who behold within their minds these three letters found in the Bhuvanapathi Chakra, where the Lord and the Goddess who are masters of the world dwell together, along with the twenty-six letters that are their source, this is granted: from the pure knowledge caught since the beginning in the birth-cycle of the three, creation, preservation and destruction, that follows every soul, they gain the lower knowledge that comes to know these three letters as wisdom; and if, after that, they also gain the higher knowledge that senses this within themselves as direct experience, then all the deeds that have followed them since the beginning fall away, and they attain liberation by God's grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ககர எழுத்திற்கு மூலமாக இருக்கும் ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தமக்குள் தரிசித்துப் பார்த்தால், அவை பொன் நிறத்தில் இருக்கும்.
If practitioners behold within themselves the five letters that have the letter "Ka" as their source, those letters appear golden in colour.
- வரி 2Line 2
அகர எழுத்திற்கு மூலமாக இருக்கும் ஓர் எழுத்துச் சிவப்பு நிறத்திலும், சகர எழுத்திற்கு மூலமாக இருக்கும் இருபது எழுத்துக்களும் தூய வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
The single letter that has "A" as its source appears red, and the twenty letters that have "Sa" as their source appear pure white.
- வரி 3Line 3
புவனாபதி சக்கரத்தில் இருக்கும் இந்த மூன்று எழுத்துக்களையும் அவற்றின் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மனத்துள் தரிசிக்கும் சாதகர்களுக்கு, அபர வித்தை ஞானமாகக் கிடைக்கும்.
For practitioners who behold within their minds these three letters found in the Bhuvanapathi Chakra along with the twenty-six letters that are their source, the lower knowledge, abara vidya, is granted as wisdom.
- வரி 4Line 4
பின்பு அதைத் தமக்குள்ளேயே அனுபவபூர்வமாக உணரும் பர வித்தையும் கிடைத்தால், அனைத்துக் கர்ம வினைகளும் நீங்கி முக்தியை இறையருளால் அடைவார்கள்.
And if, after that, they also gain the higher knowledge, para vidya, that senses this within themselves as direct experience, then all their deeds fall away and they attain liberation by God's grace.
திருமந்திரம் பாடல் #1307





