தொடர்ந்து படிக்கread this section continuously
உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளேயணைந்தெழு மாங்கதி யாதிய தாகுங்குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்கணந்தெழுங் காணு மக்காமுகை யாமே.
உரைmeaning
பாடல் #1305 இல் கூறியவாறு, சாதகர் தமக்குள் சாம்பவி மண்டலச் சக்கரத்தைப் பேரின்ப உருவமாக உணரும்போது, அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரம் ஓம் என்று நீட்டி ஓதும் ஓங்காரத்தின் ஓரெழுத்திலேயே அடங்கிவிடும். அப்போது சாதகரோடு சேர்ந்து எழுகின்ற அந்த ஓங்காரமே சாதகர் சென்றடையும் கதியாகிய மோட்சமாகவும், அவர் தொடங்கிய ஆதி மூலமாகவும் இருக்கின்றது. இதை சாதகர் முழுவதுமாக உணரும்போது, இதுவரை அவருக்குள் மாயையால் மறைந்து விளையாடிக்கொண்டிருந்த இறைவனும் இறைவியும் மாயை நீங்கி வெளிப்பட்டு, சாதகரோடு ஒன்றாகக் கலந்து சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப வடிவமாகவே இருப்பார்கள். அதன்பின் சாதகரும் அந்தப் பேரின்பத்திலேயே இறைவனோடும் இறைவியோடும் என்றும் இலயித்திருப்பார்.
As verse 1305 says, when the practitioner senses within himself the Sambhavi Mandala Chakra as a form of supreme bliss, the mantra rising from within him becomes contained in the single letter of the elongated Omkara, the sound "Om". That very Omkara, rising along with the practitioner, then becomes both the liberation which is the destination he goes on to reach, and the primal source from which he began. When the practitioner comes to sense this fully, the Lord and the Goddess, who until then had been playing hidden within him through maya, come forth free of maya and, joined together with the practitioner as one, become the very form of supreme bliss of the Sambhavi Mandala Chakra. Thereafter the practitioner too remains forever absorbed in that same supreme bliss, together with the Lord and the Goddess.
Karuthu: When the mantra's five letters within the Sambhavi Mandala Chakra rise up in the practitioner as the single letter of the Omkara, the practitioner himself becomes the Sambhavi Mandala Chakra, joined with the Lord and the Goddess who dwell within it, and remains absorbed there.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1305 இல் கூறியவாறு, சாதகர் தமக்குள் சாம்பவி மண்டலச் சக்கரத்தைப் பேரின்ப உருவமாக உணரும்போது, அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரம் ஓம் என்னும் ஓங்காரத்தின் ஓரெழுத்திலேயே அடங்கிவிடும்.
As verse 1305 says, when the practitioner senses within himself the Sambhavi Mandala Chakra as a form of supreme bliss, the mantra rising from within him becomes contained in the single letter of the Omkara, the sound "Om".
- வரி 2Line 2
அப்போது சாதகரோடு சேர்ந்து எழுகின்ற அந்த ஓங்காரமே சாதகர் சென்றடையும் கதியாகிய மோட்சமாகவும், அவர் தொடங்கிய ஆதி மூலமாகவும் இருக்கின்றது.
That very Omkara, rising along with the practitioner, then becomes both the liberation which is the destination he goes on to reach, and the primal source from which he began.
- வரி 3Line 3
இதை சாதகர் முழுவதுமாக உணரும்போது, மாயையால் மறைந்து விளையாடிக்கொண்டிருந்த இறைவனும் இறைவியும் மாயை நீங்கி வெளிப்பட்டு, சாதகரோடு ஒன்றாகக் கலந்து சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப வடிவமாகவே இருப்பார்கள்.
When the practitioner comes to sense this fully, the Lord and the Goddess, who until then had been playing hidden within him through maya, come forth free of maya and, joined together with the practitioner as one, become the very form of supreme bliss of the Sambhavi Mandala Chakra.
- வரி 4Line 4
அதன்பின் சாதகரும் அந்தப் பேரின்பத்திலேயே இறைவனோடும் இறைவியோடும் என்றும் இலயித்திருப்பார். (கருத்து: மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் ஓரெழுத்தாக எழும்போது, சாதகரே சாம்பவி மண்டலச் சக்கரமாகி, அதிலுள்ள இறைவனோடும் இறைவியோடும் கலந்து இலயித்திருப்பார்.)
Thereafter the practitioner too remains forever absorbed in that same supreme bliss, together with the Lord and the Goddess. (Karuthu: when the mantra's five letters rise up as the single letter, the practitioner himself becomes the Sambhavi Mandala Chakra, joined with the Lord and the Goddess who dwell within it, and remains absorbed there.)
திருமந்திரம் பாடல் #1306





