திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1305

நான்காம் தந்திரம்11. சாம்பவி மண்டலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆரு முரைசெய்ய லாமஞ் செழுத்தாலேயாரு மறியாத வானந்த ரூபமாம்பாரும் விசும்பும் பகலு மதியதியூனு முயிரு முணர்வது வாமே.

உரை

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் இருக்கும் மந்திரமாகிய 'சிவாய நம' என்னும் ஐந்து எழுத்துக்களை யாரும் மனத்துள் ஓதலாம். அதை முறைப்படி ஓதிச் சாதகம் செய்பவர்களுக்கு, யாராலும் எளிதில் அறிய முடியாத பேரின்ப உருவமாக இருக்கும் சாம்பவி மண்டலச் சக்கரம் புலப்படும். அதை அறிந்துகொண்ட சாதகர்களுக்கு, உலகமாகவும், ஆகாயமாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், பாடல் #1302 இல் கூறியவாறு பொன் போன்ற உடலாகவும், உயிராகவும், உணர்வாகவும் அந்தச் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப உருவமே இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    சாம்பவி மண்டலச் சக்கரத்தில் இருக்கும் மந்திரமாகிய 'சிவாய நம' என்னும் ஐந்து எழுத்துக்களை யாரும் மனத்துள் ஓதலாம்.

  • வரி 2

    அதை முறைப்படி ஓதிச் சாதகம் செய்பவர்களுக்கு, யாராலும் எளிதில் அறிய முடியாத பேரின்ப உருவமாக இருக்கும் சாம்பவி மண்டலச் சக்கரம் புலப்படும்.

  • வரி 3

    அதை அறிந்துகொண்ட சாதகர்களுக்கு, உலகமாகவும், ஆகாயமாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும் அந்தச் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப உருவமே இருக்கின்றது.

  • வரி 4

    பாடல் #1302 இல் கூறியவாறு, அதுவே பொன் போன்ற உடலாகவும், உயிராகவும், உணர்வாகவும் இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1305

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout