திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1304

நான்காம் தந்திரம்11. சாம்பவி மண்டலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பகையில்லை யென்றும் பணிந்தவர் தம்பால்நகையில்லை நாளும் நன்மைக ளாகும்வினையில்லை யென்றும் விருத்தமு மில்லைத்தகையில்லைத் தானுஞ் சலமது வாமே.

உரை

பாடல் #1303 இல் கூறியவாறு, உலகில் உள்ள எந்தப் பற்றுதலும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். இறைவனை வணங்கித் தொழுகின்ற சாதகருக்கு, அவரைச் சூழ்ந்திருக்கும் உலகத்தால் நன்மையோ தீமையோ எதுவும் நேராது; எல்லா நாட்களும் அவருக்கு நன்மையான நாட்களாகவே இருக்கும். நல்வினை தீவினை என்று எதுவும் அவருக்கு இல்லாமல் போய்விடும்; இனி எப்போதும் புதிதாக வினைகள் வந்து சேராது. தமது சாதகத்திற்குத் தடையேதும் இல்லாமல், தாமும் தடையின்றி, உலக நன்மைக்காகச் சுழற்சியாகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும் நிலையை அவர் அடைந்துவிடுவார்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1303 இல் கூறியவாறு, உலகில் உள்ள எந்தப் பற்றுதலும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

  • வரி 2

    இறைவனை வணங்கித் தொழுகின்ற சாதகருக்கு, அவரைச் சூழ்ந்திருக்கும் உலகத்தால் நன்மையோ தீமையோ எதுவும் நேராது; எல்லா நாட்களும் அவருக்கு நன்மையான நாட்களாகவே இருக்கும்.

  • வரி 3

    நல்வினை தீவினை என்று எதுவும் அவருக்கு இல்லாமல் போய்விடும்; இனி எப்போதும் புதிதாக வினைகள் வந்து சேராது.

  • வரி 4

    தமது சாதகத்திற்குத் தடையேதும் இல்லாமல், தாமும் தடையின்றி, உலக நன்மைக்காகச் சுழற்சியாகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும் நிலையை அவர் அடைந்துவிடுவார்.

திருமந்திரம் பாடல் #1304

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout