திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1303

நான்காம் தந்திரம்11. சாம்பவி மண்டலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்போமே யதுதானும் போம்வழி யேபோகானால்நாமே நினைத்தன செய்யலு மாகும்பார்மே லொருவர் பகையில்லை தானே.

உரை

பாடல் #1302 இல் உள்ளபடி, சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கும் சக்தியின் அருள்பெற்ற சாதகர்களுக்கு, பாடல் #1300 இல் உள்ளபடி இடையறாது உச்சரிக்கும் 'சிவாய நம' எனும் மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துகளே, இறைவனை நோக்கி சாதகரின் எண்ணங்களை எடுத்துச் செல்லும் வழியாக இருக்கின்றன என்று பாடல் கூறுகிறது. சாதகர்கள் தங்கள் எண்ணங்களைச் சிந்தனை போகும் போக்கில் விட்டுவிடாமல், சிவாயநம என்னும் எழுத்துகள் வழியாக இறைவனை நோக்கியே செலுத்திக்கொண்டிருந்தால், சாதகர்கள் நினைக்கும் அனைத்தையும் செயலாக்க முடியும் என்றும், அதன்பிறகு உலகில் உள்ள எந்தப் பற்றுகளும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும் என்றும் பாடல் உரைக்கிறது. கருத்து: சாதகர் தனக்குள் தோன்றும் எண்ணத்தின் வழியே செல்லாமல், தான் இடையறாது உச்சரிக்கும் சிவாயநம மந்திரத்துடன் தன் எண்ணங்களைச் செலுத்தினால், இந்த உலகில் சாதகர் நினைக்கும் அனைத்தையும் அவரால் செயலாக்க முடியும் என்று பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1302 இல் உள்ளபடி, சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கும் சக்தியின் அருள்பெற்ற சாதகர்களுக்கு, பாடல் #1300 இல் உள்ளபடி இடையறாது உச்சரிக்கும் 'சிவாய நம' எனும் மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துகளே, இறைவனை நோக்கி சாதகரின் எண்ணங்களை எடுத்துச் செல்லும் வழியாக இருக்கின்றன என்று பாடல் கூறுகிறது.

  • வரி 2

    சாதகர்கள் தங்கள் எண்ணங்களைச் சிந்தனை போகும் போக்கில் விட்டுவிடாமல், சிவாயநம என்னும் எழுத்துகள் வழியாக இறைவனை நோக்கியே செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று பாடல் உரைக்கிறது.

  • வரி 3

    இப்படிச் செய்தால் சாதகர்கள் நினைக்கும் அனைத்தையும் செயலாக்க முடியும் என்றும், அதன்பிறகு உலகில் உள்ள எந்தப் பற்றுகளும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும் என்றும் பாடல் கூறுகிறது.

  • வரி 4

    கருத்து: சாதகர் தனக்குள் தோன்றும் எண்ணத்தின் வழியே செல்லாமல், தான் இடையறாது உச்சரிக்கும் சிவாயநம மந்திரத்துடன் தன் எண்ணங்களைச் செலுத்தினால், இந்த உலகில் சாதகர் நினைக்கும் அனைத்தையும் அவரால் செயலாக்க முடியும் என்று பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1303

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout