தொடர்ந்து படிக்கread this section continuously
காணும் பொருளுங் கருதிய தெய்வமும்பேணும் பதியும் பெருகிய தீர்த்தமுமூணு முணர்வு முறக்கமுந் தானாயக்காணுங் கனகமுங் காரிகை யாமே.
உரைmeaning
பாடல் #1301 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் கண்டுணர்ந்த பேருண்மையான பரம்பொருளே, அவர்களின் எண்ணத்திற்கேற்ற வடிவங்களைக் கொண்ட தெய்வமாக அவர்களுக்குள் வீற்றிருக்கிறார் என்று பாடல் கூறுகிறது. தமது உடலுக்குள் பரம்பொருளே தெய்வமாக வீற்றிருப்பதால், சாதகர்கள் முறையாகப் பேணிக் காக்கும் உடலும், அதனால் சாதகர்களுக்குள் ஊற்றெடுத்துப் பெருகும் அமிழ்தமும், சாதகர்களின் ஆன்மா நுகரும் இன்பமும், அதனால் கிடைக்கும் பேரின்ப உணர்வும், அந்த உணர்விலேயே இலயித்திருக்கும் நிலையும், இந்த நிலையை அடைந்தபின் அவர்கள் காணும்படித் தானாகவே பொன் போல மாறும் உடலும் ஆகிய இவை அனைத்துமே, சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கும் இறை சக்தியின் அருளால் கிடைக்கும் பேறுகள் என்று பாடல் உரைக்கிறது. கருத்து: சாம்பவி மண்டலச் சக்கர சாதகம் செய்யும் சாதகர், பேருண்மையான பரம்பொருளைத் தமக்குள் கண்டுணர்ந்து, இறைவன் வீற்றிருக்கும் தமது உடலையே கோயிலாக எண்ணிப் பேணிக்காத்து, உள்ளிருக்கும் இறைவனைப் போற்றி வணங்கி வழிபடும்போது அவரது ஆன்மா இன்பத்தை நுகர்கிறது; அதன்பின் அவருக்குள் அமிழ்தம் ஊற்றெடுக்கிறது; அந்த அமிழ்தத்தைப் பருகிய பேரின்ப உணர்விலேயே சாதகர் இலயித்திருக்கும்போது அவரின் உடல் பொன் போல மாறி என்றும் அழியாத நிலை பெறுகிறது; இவை அனைத்தும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கும் இறை சக்தியால் அவருக்குக் கிடைக்கின்றன என்று பாடல் கூறுகிறது.
As in verse #1301, the verse declares that the great truth, the Supreme Being, which sadhakas have beheld and realized within themselves, dwells within them as a deity taking forms to fit their thought. Because the Supreme Being itself dwells as deity within their body, it declares that the body which sadhakas duly cherish and guard, the nectar that consequently wells up and swells within them, the bliss their soul savors, the feeling of supreme joy that thereby comes, the state of remaining absorbed in that very feeling, and the body that, once this state is reached, itself turns golden before their own eyes, are all boons granted by the grace of the divine power at work as the Sambhavi mandala chakra. Its gist: the sadhaka who performs the Sambhavi mandala chakra sadhana beholds and realizes the great truth within, and when he cherishes and guards his own body, the temple where God dwells, and worships and adores the God within, his soul savors bliss; thereafter nectar wells up within him; and as the sadhaka, having drunk that nectar, remains absorbed in that supreme bliss, his body turns golden and gains an ever-imperishable state; all these, the verse declares, come to him through the divine power at work as the Sambhavi mandala chakra.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1301 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் கண்டுணர்ந்த பேருண்மையான பரம்பொருளே, அவர்களின் எண்ணத்திற்கேற்ற வடிவங்களைக் கொண்ட தெய்வமாக அவர்களுக்குள் வீற்றிருக்கிறார் என்று பாடல் கூறுகிறது.
As in verse #1301, the verse declares that the great truth, the Supreme Being, which sadhakas have beheld and realized within themselves, dwells within them as a deity taking forms to fit their thought.
- வரி 2Line 2
தமது உடலுக்குள் பரம்பொருளே தெய்வமாக வீற்றிருப்பதால், சாதகர்கள் முறையாகப் பேணிக் காக்கும் உடலும், அதனால் ஊற்றெடுத்துப் பெருகும் அமிழ்தமும் கிடைக்கும் என்று பாடல் உரைக்கிறது.
Because the Supreme Being itself dwells as deity within their body, the verse states, they gain the body which they duly cherish and guard, and the nectar that consequently wells up and swells within them.
- வரி 3Line 3
சாதகர்களின் ஆன்மா நுகரும் இன்பமும், அதனால் கிடைக்கும் பேரின்ப உணர்வும், அந்த உணர்விலேயே இலயித்திருக்கும் நிலையும் கிடைக்கும் என்று பாடல் கூறுகிறது.
The verse declares that the bliss their soul savors, the feeling of supreme joy that thereby comes, and the state of remaining absorbed in that very feeling, are also gained.
- வரி 4Line 4
இந்த நிலையை அடைந்தபின் அவர்கள் காணும்படித் தானாகவே பொன் போல மாறும் உடலும் இவை அனைத்தும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கும் இறை சக்தியின் அருளால் கிடைக்கும் பேறுகள் என்று பாடல் உரைக்கிறது.
The verse states that the body that, once this state is reached, itself turns golden before their own eyes, along with all these, are boons granted by the grace of the divine power at work as the Sambhavi mandala chakra.
திருமந்திரம் பாடல் #1302





