திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1310

நான்காம் தந்திரம்12. புவனாபதி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எட்டா கியசத்தி யெட்டாகும் யோகத்துக்கட்டாகி நாதாந்தத் தெட்டுங் கலப்பித்தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்துகிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

உரை

பாடல் #1309 இல் கூறியவாறு, சாதகர்கள் தமது யோகத்தால் அடையக்கூடிய எட்டு வகைச் சித்திகளில் இருக்கும் எட்டு வகைச் சக்திகளே, எட்டு வகையான யோகங்களுக்கும் பூரண சக்திகளாக இருக்கின்றன. இந்த எட்டு வகைச் சக்திகளும் ஒன்றோடொன்று சேர்ந்து, நாதத்தின் எல்லையாக இருக்கும் பராசக்தியோடு ஒன்றாகக் கலந்து நிற்கும்போது, அவற்றோடு ஒட்டாமல் தனியாகப் பிரிந்து நிற்கும் சாதகரின் ஆன்ம ஒளியும், தான் என்னும் அகங்காரம் நீங்கி அழிந்துபோகும். தான் என்பது முற்றிலும் அழிந்து இறைவியோடு ஒன்றாக நிற்கும் இந்த நிலை, இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாத கீழான மூடர்க்குக் கிட்டாமல் அழிந்துபோகும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1309 இல் கூறியவாறு, சாதகர்கள் தமது யோகத்தால் அடையக்கூடிய எட்டு வகைச் சித்திகளில் இருக்கும் எட்டு வகைச் சக்திகளே, எட்டு வகையான யோகங்களுக்கும் பூரண சக்திகளாக இருக்கின்றன.

  • வரி 2

    இந்த எட்டு வகைச் சக்திகளும் ஒன்றோடொன்று சேர்ந்து, நாதத்தின் எல்லையாக இருக்கும் பராசக்தியோடு ஒன்றாகக் கலந்து நிற்கும்.

  • வரி 3

    அப்போது, அவற்றோடு ஒட்டாமல் தனியாகப் பிரிந்து நிற்கும் சாதகரின் ஆன்ம ஒளியும், தான் என்னும் அகங்காரம் நீங்கி அழிந்துபோகும்.

  • வரி 4

    தான் என்பது முற்றிலும் அழிந்து இறைவியோடு ஒன்றாக நிற்கும் இந்த நிலை, ஞானம் கிடைத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாத கீழான மூடர்க்குக் கிட்டாமல் அழிந்துபோகும்.

திருமந்திரம் பாடல் #1310

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout