தொடர்ந்து படிக்கread this section continuously
புண்ணிய னாகிப் பொருந்தி யுலகெங்குங்கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுந்தண்ணிய னாகித் தரணி முழுதுக்குமண்ணிய னாக வமர்ந்திருந் தானே.
உரைmeaning
பாடல் #1342 இல் உள்ளபடி, தமது திருவடிகளை இறைவனின் திருவடிகளாகவே பாவித்து வணங்குகின்ற அடியவர்களையும் புண்ணியர்களாக ஆக்குகின்ற பேறு பெற்ற குருநாதராக இருக்கின்ற சாதகர், அனைத்து உலகங்களோடும் சேர்ந்தே இருந்து, அதிலுள்ள அனைத்து உயிர்களும் செய்கின்ற புண்ணியத்தின் பயனுக்கு ஏற்றவாறு அனைத்தையும் செயல்படுத்துகின்றவராக இருக்கிறார் என்று பாடல் கூறுகிறது. அது மட்டுமின்றி, அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்திலும் கலந்திருந்து, அவற்றைக் காணுகின்ற கண்களின் பார்வையாகவே அனைத்தையும் பார்க்கச் செய்கின்றவராகவும் இருக்கிறார். உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து உயிர்களோடும் நெருங்கி இருந்து, அவற்றின் பக்குவத்திற்கு ஏற்றபடி மழை போல் அருளுகின்றவராகவும் அவரே இருக்கிறார். இவ்வாறு தமது சாதனையை இடைவிடாது தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதன் மூலம் அனைத்தையும் செயல்படுத்துகின்றவராகச் சாதகர் இருக்கிறார் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1342 says, the practitioner, who has attained the state of being the guru who makes even the devotees who worship his sacred feet as though they were God's own sacred feet meritorious, remains united with all the worlds, and works all things according to the fruit of the merit that all beings within them perform, the verse declares. Not only that, he is also united with everything in the whole of creation and makes all things be seen through the very sight of the eyes that behold them. He himself, remaining close to every living being throughout the world, also graces them like rain according to their readiness. And thus, by continuing his own sadhana without ceasing, the practitioner is one who sets all things in motion, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தமது திருவடிகளை இறைவனின் திருவடிகளாகவே பாவித்து வணங்குகின்ற அடியவர்களையும் புண்ணியர்களாக ஆக்குகின்ற பேறு பெற்ற குருநாதராக இருக்கின்ற சாதகர், அனைத்து உலகங்களோடும் சேர்ந்தே இருந்து,
The practitioner, who has attained the state of being the guru who makes even the devotees who worship his sacred feet as though they were God's own sacred feet meritorious, remains united with all the worlds,
- வரி 2Line 2
அதிலுள்ள அனைத்து உயிர்களும் செய்கின்ற புண்ணியத்தின் பயனுக்கு ஏற்றவாறு அனைத்தையும் செயல்படுத்துகின்றவராகவும், அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்திலும் கலந்திருந்து அவற்றைக் காணுகின்ற கண்களின் பார்வையாகவும் இருக்கிறார்.
and works all things according to the fruit of the merit that all beings within them perform, and is united with everything in the whole of creation, being the very sight of the eyes that behold it.
- வரி 3Line 3
உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து உயிர்களோடும் நெருங்கி இருந்து, அவற்றின் பக்குவத்திற்கு ஏற்றபடி மழை போல் அருளுகின்றவராகவும் அவரே இருக்கிறார்.
He himself, remaining close to every living being throughout the world, also graces them like rain according to their readiness.
- வரி 4Line 4
இவ்வாறு தமது சாதனையை இடைவிடாது தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதன் மூலம் அனைத்தையும் செயல்படுத்துகின்றவராகச் சாதகர் இருக்கிறார்.
And thus, by continuing his own sadhana without ceasing, the practitioner is one who sets all things in motion.
திருமந்திரம் பாடல் #1343





