தொடர்ந்து படிக்கread this section continuously
ஆமே யனைத்துயி ராகிய வம்மையுந்தானே சகலமு மீன்றவத் தையலுமாமே யவனடி போற்றி வணங்கிடிற்போமே வினைகளாம் புண்ணிய னாகுமே.
உரைmeaning
பாடல் #1341 இல் உள்ளபடி, மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர், அனைத்து உயிர்களுமாக இருக்கின்ற இறைவியாகவும் ஆகிவிடுவார் என்று பாடல் கூறுகிறது. இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்திருந்து, அனைத்து உயிர்களுக்கும் வேண்டிய அனைத்துப் பொருள்களையும் உருவாக்கிய சக்தியாகவும் அவரே ஆகிவிடுவார். இவ்வாறு அனைத்தையும் உருவாக்குகின்ற சக்தியாகவே ஆகிவிட்ட சாதகரின் திருவடியை இறைவனாகவே போற்றி வணங்கி வழிபடும் அடியவர்களைவிட்டு அனைத்து வினைகளும் விலகிப்போய், அவர்களும் புண்ணியனாகவே ஆகிவிடுவார்கள் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1341 says, the practitioner who has himself become a leader worshipped by others will also become the Goddess who is all living beings, the verse declares. Ever joined as one with God, he will himself also become the power that created all the things needed by all living beings. And thus, from the devotees who praise and worship the sacred feet of the practitioner who has himself become the power that creates all things, treating him as God himself, all karmas will depart, and they too will become meritorious, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர், அனைத்து உயிர்களுமாக இருக்கின்ற இறைவியாகவும் ஆகிவிடுவார்.
The practitioner who has himself become a leader worshipped by others will also become the Goddess who is all living beings.
- வரி 2Line 2
இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்திருந்து, அனைத்து உயிர்களுக்கும் வேண்டிய அனைத்துப் பொருள்களையும் உருவாக்கிய சக்தியாகவும் அவரே ஆகிவிடுவார்.
Ever joined as one with God, he will himself also become the power that created all the things needed by all living beings.
- வரி 3Line 3
இவ்வாறு அனைத்தையும் உருவாக்குகின்ற சக்தியாகவே ஆகிவிட்ட சாதகரின் திருவடியை இறைவனாகவே போற்றி வணங்கி வழிபடும் அடியவர்களைவிட்டு,
From the devotees who praise and worship the sacred feet of the practitioner who has thus himself become the power that creates all things, treating him as God himself,
- வரி 4Line 4
அனைத்து வினைகளும் விலகிப்போய், அவர்களும் புண்ணியனாகவே ஆகிவிடுவார்கள்.
all karmas will depart, and they too will become meritorious.
திருமந்திரம் பாடல் #1342





