திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1336

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டவிச் சக்கர நாவிலெ ழுந்திடிற்கொண்டவிம் மந்திரங் கூத்தன் குறியதாமன்றினுள் வித்தையு மானிடர் கையதாம்வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.

உரை

பாடல் #1335 இல் உள்ளபடி, சாதகர்கள் தரிசித்த இறைவி வீற்றிருக்கும் இந்த நவாக்கிரி சக்கரம் சாதகர்களின் நாவிலும் எழுந்துவிட்டால், சாதகர்கள் பெற்றுக்கொண்ட அந்தச் சக்கரத்திலுள்ள மந்திரங்களே திருநடனம் புரிகின்ற இறைவனின் திருவுருவத்தைக் குறிக்கின்ற அடையாளமாகவே இருக்கும் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, உலகில் மனிதர்கள் தங்கள் குருகுலங்களில் கற்றுக் கைவரப்பெற்றிருக்கும் அனைத்து வகை வித்தைகளையும், மென்மையான இயல்பைக் கொண்ட இறைவியோடு ஒன்றாகச் சேர்ந்திருந்தே சாதகர்கள் வென்றுவிட முடியும் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகர்கள் தரிசித்த இறைவி வீற்றிருக்கும் இந்த நவாக்கிரி சக்கரம் சாதகர்களின் நாவிலும் எழுந்துவிட்டால்,

  • வரி 2

    சாதகர்கள் பெற்றுக்கொண்ட அந்தச் சக்கரத்திலுள்ள மந்திரங்களே திருநடனம் புரிகின்ற இறைவனின் திருவுருவத்தைக் குறிக்கின்ற அடையாளமாகவே இருக்கும்.

  • வரி 3

    அதன்பிறகு, உலகில் மனிதர்கள் தங்கள் குருகுலங்களில் கற்றுக் கைவரப்பெற்றிருக்கும் அனைத்து வகை வித்தைகளையும்,

  • வரி 4

    மென்மையான இயல்பைக் கொண்ட இறைவியோடு ஒன்றாகச் சேர்ந்திருந்தே சாதகர்கள் வென்றுவிட முடியும்.

திருமந்திரம் பாடல் #1336

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout