தொடர்ந்து படிக்கread this section continuously
அளித்திடு நாவுக் கரசிவள் தன்னைப்பழுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்தொகுத்தொரு நாவிடைச் சொல்ல வல்லாளைமுகத்துளு முன்னெழக் கண்டு கொளீரே.
உரைmeaning
பாடல் #1334 இல் உள்ளபடி, இறைவியின் திருவருளைத் தகுதியானவர்களுக்கு அளிக்கும் சாதகர்களின் நாவுக்கு அரசியாக இருக்கும் இறைவியை முழுவதும் அறிந்துகொண்டு, முக்தி பெறுவதற்கு வழி காட்டுகின்ற வேதங்களையும் பேருண்மையான ஆகமங்கள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்துத் தன் ஒரே நாவின் நடுவே வைத்து எடுத்துச் சொல்லும் வல்லமை பொருந்திய இறைவியை, சாதகர்கள் எந்த வடிவத்தில் நினைத்து வழிபடுகிறார்களோ அந்த வடிவத்திலேயே அவர்கள் முன்னால் எழுந்தருளுவதைத் தங்கள் கண்களால் கண்டு தரிசிப்பார்கள் என்று பாடல் கூறுகிறது.
As verse 1334 says, practitioners who give the Goddess's grace to those who are worthy come to know fully the Goddess who is queen of their tongue. The verse declares that they will see with their own eyes and behold that mighty Goddess, who gathers together the Vedas that show the way to liberation and all the great and true Agamas and utters them all from the midst of her one tongue, rising before them in whatever form they think of her and worship her.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தகுதியானவர்களுக்கு இறைவியின் திருவருளை அளிக்கும் சாதகர்களின் நாவுக்கு அரசியாக இருக்கும் இறைவியை முழுவதும் அறிந்துகொண்டு,
Practitioners who give the Goddess's grace to those who are worthy come to know fully the Goddess who is queen of their tongue, and
- வரி 2Line 2
முக்தி பெறுவதற்கு வழி காட்டுகின்ற வேதங்களையும் பேருண்மையான ஆகமங்கள் அனைத்தையும்,
the Vedas that show the way to liberation and all the great and true Agamas,
- வரி 3Line 3
ஒன்றாகத் தொகுத்துத் தன் ஒரே நாவின் நடுவே வைத்து எடுத்துச் சொல்லும் வல்லமை பொருந்திய இறைவியை,
gathered together and uttered from the midst of her one tongue by that mighty Goddess,
- வரி 4Line 4
சாதகர்கள் எந்த வடிவத்தில் நினைத்து வழிபடுகிறார்களோ அந்த வடிவத்திலேயே அவர்கள் முன்னால் எழுந்தருளுவதைத் தங்கள் கண்களால் கண்டு தரிசிப்பார்கள்.
they will see with their own eyes and behold her rising before them in whatever form they think of her and worship her.
திருமந்திரம் பாடல் #1335





