தொடர்ந்து படிக்கread this section continuously
மெல்லிய லாகிய மெய்ப்பொரு டாடன்னைச்சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்பல்லியல் பாகப் பரந்தெழு நாள்பலநல்லியல் பாக நடந்திடுந் தானே.
உரைmeaning
பாடல் #1336 இல் உள்ளபடி, மென்மையான தன்மையைக் கொண்டு உண்மைப் பொருளின் உருவமாகவே விளங்குகின்ற இறைவி, சாதகர் தம் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களைச் செபிக்கும் தன்மைக்கு ஏற்றபடி அவரைத் தொடர்ந்து, அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து வீற்றிருப்பாள் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, சாதகருக்குள்ளிருந்து எழுந்து உலகம் முழுவதும் பரந்து செல்லும் அச்சக்தி, நல்வினை தீவினை ஆகியவற்றால் பலவிதமாகக் கடந்துசெல்லும் பல நாட்களையும் நல்வினை கொண்ட நாட்களாக மாற்றி, அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி அருளும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1336 says, the Goddess, who shines as the very form of the true reality and possesses a gentle nature, will follow the practitioner according to the manner in which he chants the mantras he received from his guru, and will remain enthroned with him wherever he is, the verse declares. It closes by declaring that the power which then rises from within the practitioner and spreads throughout the whole world will turn the many days that pass in various ways through good and bad deeds into days of good deeds, and will grace all things so that they unfold well.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மென்மையான தன்மையைக் கொண்டு உண்மைப் பொருளின் உருவமாகவே விளங்குகின்ற இறைவி,
The Goddess, who shines as the very form of the true reality and possesses a gentle nature,
- வரி 2Line 2
சாதகர் தம் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களைச் செபிக்கும் தன்மைக்கு ஏற்றபடி அவரைத் தொடர்ந்து, அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து வீற்றிருப்பாள்.
will follow the practitioner according to the manner in which he chants the mantras he received from his guru, and will remain enthroned with him wherever he is.
- வரி 3Line 3
அதன்பிறகு, சாதகருக்குள்ளிருந்து எழுந்து உலகம் முழுவதும் பரந்து செல்லும் அச்சக்தி,
Then the power which rises from within the practitioner and spreads throughout the whole world
- வரி 4Line 4
நல்வினை தீவினை ஆகியவற்றால் பலவிதமாகக் கடந்துசெல்லும் பல நாட்களையும் நல்வினை கொண்ட நாட்களாக மாற்றி, அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி அருளும்.
will turn the many days that pass in various ways through good and bad deeds into days of good deeds, and will grace all things so that they unfold well.
திருமந்திரம் பாடல் #1337





