தொடர்ந்து படிக்கread this section continuously
நடந்திடு நாவினினு ண்மைக ளெல்லாந்தொடர்ந்திடுஞ் சொல்லொடுஞ் சொற்பொரு டானுங்கடந்திடுங் கல்விக் கரசிவ னாகப்படர்ந்திடும் பாரிற் பகையில்லைத் தானே.
உரைmeaning
பாடல் #1337 இல் உள்ளபடி, அனைத்தும் நன்மையாகவே நடந்துகொண்டிருக்கும் சாதகரின் நாவில் உண்மை எனப்படும் சத்தியங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, சாதகர் சொல்லும் அனைத்து வார்த்தைகளும் அவரது சொல்லைத் தொடர்ந்தே உடனே உண்மையாகவே ஆகிச் செயல்படும். அதனால், அவரது நாவிலிருந்து வருகின்ற அனைத்து வகைச் சொற்களாகிய ஞானத்திற்கும் அரசனாகவே சாதகரும் ஆகிவிடுவார். அதன்பிறகு, படர்ந்து விரிந்திருக்கும் இவ்வுலகில் பகை எனப்படுவது எதுவும் சாதகருக்கு இல்லாமல் போய்விடும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1337 says, all the truths known as reality will come to reside on the tongue of the practitioner in whom everything is now unfolding for good, the verse declares. After that, every word the practitioner speaks will immediately become true, following upon his very utterance. Because of this, the practitioner too will become the king of the wisdom that is all the varied words coming from his tongue. It closes by declaring that after this, nothing known as hostility will remain for the practitioner in this wide-spread world.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்தும் நன்மையாகவே நடந்துகொண்டிருக்கும் சாதகரின் நாவில் உண்மை எனப்படும் சத்தியங்கள் அனைத்தும் கிடைக்கும்.
All the truths known as reality will come to reside on the tongue of the practitioner in whom everything is now unfolding for good.
- வரி 2Line 2
அதன்பிறகு, சாதகர் சொல்லும் அனைத்து வார்த்தைகளும் அவரது சொல்லைத் தொடர்ந்தே உடனே உண்மையாகவே ஆகிச் செயல்படும்.
After that, every word the practitioner speaks will immediately become true, following upon his very utterance.
- வரி 3Line 3
அதனால், அவரது நாவிலிருந்து வருகின்ற அனைத்து வகைச் சொற்களாகிய ஞானத்திற்கும் அரசனாகவே சாதகரும் ஆகிவிடுவார்.
Because of this, the practitioner too will become the king of the wisdom that is all the varied words coming from his tongue.
- வரி 4Line 4
அதன்பிறகு, படர்ந்து விரிந்திருக்கும் இவ்வுலகில் பகை எனப்படுவது எதுவும் சாதகருக்கு இல்லாமல் போய்விடும்.
After this, nothing known as hostility will remain for the practitioner in this wide-spread world.
திருமந்திரம் பாடல் #1338





