தொடர்ந்து படிக்கread this section continuously
பகையில்லைக் கௌமுத லைந்து மேலாகுநகையில்லைச் சக்கர நன்றறி வார்க்குத்தொகையில்லைச் சொல்லிய பல்லுயி ரெல்லாம்வகையில்லை யாக வணங்கிடுந் தானே.
உரைmeaning
பாடல் #1338 இல் உள்ளபடி, இவ்வுலகில் பகை என அறியப்படுவது எதுவும் இல்லாத சாதகரின், நிலம் முதலாகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலும் மேன்மை நிலை பெறும் என்று பாடல் கூறுகிறது. நவாக்கிரி சக்கரத்தைத் தமக்குள் மிக நன்றாக அறிந்துகொண்ட சாதகர்களுக்கு, இவ்வுலகில் இழிவானது என அறியப்படுவது எதுவும் இல்லாமல் போய்விடும். உலகத்தவர்களால் உயிர்கள் எனச் சொல்லப்படுகின்ற அனைத்து வகை உயிர்களையும் ஒரு கூட்டமாகவும் பல வகைகளாகவும் பிரித்துப் பாராமல், அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற அப்படிப்பட்ட சாதகர்களை, அனைத்து உயிர்களும் இறைவியாகவே போற்றி வணங்கி அன்பு செலுத்தும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1338 says, the body of a practitioner in whom nothing known as hostility remains, made of the five elements beginning with earth, will attain a state of nobility, the verse declares. For practitioners who have come to know the Nine-Letter Chakra very well within themselves, nothing known as base in this world will remain. Such practitioners, who do not divide all the many kinds of beings that people of the world call living beings into one group or into many kinds, but see all of them as God alone, will be praised, worshipped and loved by all beings as though they were the Goddess herself, the verse declares in closing.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இவ்வுலகில் பகை என அறியப்படுவது எதுவும் இல்லாத சாதகரின், நிலம் முதலாகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலும் மேன்மை நிலை பெறும்.
The body of a practitioner in whom nothing known as hostility remains, made of the five elements beginning with earth, will attain a state of nobility.
- வரி 2Line 2
நவாக்கிரி சக்கரத்தைத் தமக்குள் மிக நன்றாக அறிந்துகொண்ட சாதகர்களுக்கு, இவ்வுலகில் இழிவானது என அறியப்படுவது எதுவும் இல்லாமல் போய்விடும்.
For practitioners who have come to know the Nine-Letter Chakra very well within themselves, nothing known as base in this world will remain.
- வரி 3Line 3
உலகத்தவர்களால் உயிர்கள் எனச் சொல்லப்படுகின்ற அனைத்து வகை உயிர்களையும் ஒரு கூட்டமாகவும் பல வகைகளாகவும் பிரித்துப் பாராமல் அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற சாதகர்களை,
Such practitioners, who do not divide all the many kinds of beings that people of the world call living beings into one group or into many kinds, but see all of them as God alone,
- வரி 4Line 4
அனைத்து உயிர்களும் இறைவியாகவே போற்றி வணங்கி அன்பு செலுத்தும்.
will be praised, worshipped and loved by all beings as though they were the Goddess herself.
திருமந்திரம் பாடல் #1339





