திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1340

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னைநலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்கலந்திடுங் காம வெகுளி மயக்கந்துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

உரை

பாடல் #1339 இல் உள்ளபடி, உயிர்களால் வணங்கப்படும் நிலையை அடைந்து, நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்குத் தலைவியாகவே தாமும் ஆகிவிட்ட சாதகரின் மேல் கொண்ட பக்தியாலும் அன்பாலும் அவரை வழிபடும் நல்ல உயிர்களாகப் பக்குவப்பட்ட அனைத்து உயிர்களோடும் கலந்திருக்கும் ஆசை, கோபம், மாயையால் ஏற்படும் மயக்கம் ஆகிய குற்றங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, உயிர்களின் பிறவிக்குக் காரணம் என வேதங்கள் சொல்லுகின்ற, உயிர்களைச் சூழ்ந்திருக்கின்ற வினைகளும் அவற்றை விட்டு நீங்கிவிடும் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களால் வணங்கப்படும் நிலையை அடைந்து, நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்குத் தலைவியாகவே தாமும் ஆகிவிட்ட சாதகரின் மேல்,

  • வரி 2

    கொண்ட பக்தியாலும் அன்பாலும் அவரை வழிபடும் நல்ல உயிர்களாகப் பக்குவப்பட்ட அனைத்து உயிர்களுக்கும்,

  • வரி 3

    கலந்திருக்கும் ஆசை, கோபம், மாயையால் ஏற்படும் மயக்கம் ஆகிய குற்றங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

  • வரி 4

    அதன்பிறகு, உயிர்களின் பிறவிக்குக் காரணம் என வேதங்கள் சொல்லுகின்ற, உயிர்களைச் சூழ்ந்திருக்கின்ற வினைகளும் அவற்றை விட்டு நீங்கிவிடும்.

திருமந்திரம் பாடல் #1340

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout