திருமூலர் அருளிய திருமந்திரம்
2. திருவம்பலச் சக்கரம்

நான்காம் தந்திரம் பாடல் 914–1002 (89 பாடல்கள்)

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகைஇருந்த இரேகைமேல் ஈரா றிருத்திஇருந்த மனைகளும் ஈராறு பத்தொன்றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்தானொன்றி லேயொன்று மவ்வரனும் தானே.

அரகர என்ன அரியதொன் றில்லைஅரகர என்ன அறிகிலர் மாந்தர்அரகர என்ன அமரரும் ஆவர்அரகர என்ன அறும்பிறப் பன்றே.

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்பட்டது மந்திரமும் பான்மொழி பாலே.

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்கட்டவல் லாருயிரைக் காக்கவல் லாரே.

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்ஆலய மாக அமர்ந்தவித் தூலம்போய்ஆலய மாக வருகின்ற சூக்குமம்ஆலய மாக அமர்ந்துஇருந் தானே.

இருந்தஇவ் வட்டம் இருமூன்றி ரேகைஇருந்த வதனுள் இரேகை யைந்தாகஇருந்த அறைகள் இருபத்தஞ் சாகஇருந்தறை யொன்றி லெய்து மகாரமே.

மகார நடுவே வளைத்திடும் சத்தியைஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றிஅகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்நகார வகாரநற் காலது நாடுமே.

நாடும் பிரணவ நடுவிரு பக்கம்ஆடு மவர்வாய் அமர்ந்தங்கு நின்றதுநாடு நடுவுண் முகநம சிவாயவாடுஞ் சிவாயநம புறத் தாயதே.

ஆயுஞ் சிவாய நமமசி வாயநவாயு நமசிவா யயநம சிவாவாயு வாய நமசியெனு மந்திரமாயுந் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே.

அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கிஅடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்அமர்ந்த அரிகரி யாமா னுள்வட்டம்அமர்ந்த அசபை யாம்அத னுள்வட்டம்அமர்ந்த இரேகை ஆகின்ற சூலமே.

சூலத் தலையினில் தோற்றிடுஞ் சத்தியுஞ்சூலத் தலையினிற் சூழூம்ஓங் காரத்தால்சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்தாலப் பதிக்கும் அடைவு அதுதானே.

அதுவாம் அகார இகார உகாரம்அதுவாம் எகாரம் ஒகார மதஞ்சாம்அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம்பொதுவாம் இடைவெளி பொங்கநம் பேரே.

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னதுசோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின்செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்முயலும் எழுத்தின் முன்னா இருந்ததே.

ஆறெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும்ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ்சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்கூறுஇட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளேபெண்ணிநல் லாளும் பிரானக் கரத்துளேஎண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்துஇவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளதுகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லைகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்சவ்வுண்ட சத்தியும் சதாசிவன் தானே.

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்அஞ்செழுத் துஉள்ளே அமர்ந்திருந் தானே.

கூத்தனைக் காணும் குறிபல பேசிடிற்கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார்கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர்கூத்தனைக் காணும் குறியுமது வாமே.

அத்திசைக் குள்நின் றனலை எழுப்பியேஅத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்அத்திசைக் குள்நின்ற அந்த மறையனைஅத்திசைக் குள்ளுறவு ஆக்கினன் தானே.

தானே யளித்திடுந் தையலை நோக்கினால்தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந்தானே யளித்த மகாரத்தை ஓதிடத்தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

கல்லொளி யேஎன நின்ற வடதிசைகல்லொளி யேஎன நின்றனன் இந்திரன்கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

தானே யெழுகுணந் தண்சுட ராய்நிற்குந்தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்குந்தானே யெழுகுண மாவதும் ஓதிடில்தானே யெழுந்த மறையவ னாமே.

மறையவ னாக மதித்த பிறவிமறையவ னாக மதித்திடக் காண்பர்மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்றமறையவன் அஞ்செழுத் தாமவ ராமே.

ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்ஆகின்ற வச்சுட ரவ்வியல்பு ஆமே.

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போகஉரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியைநாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தைஆமென் றெழுப்பியவ் வாறுஅறி வார்கள்மாமன்று கண்டு மகிழ்ந்துஇருந் தாரே.

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்பரமாய நவசிம பார்க்கின் மவயநசிபரமாய சியநம வாம்பரத் தோதிற்பரமாய வாசி மயநமாய் நின்றே.

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பலகொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்துகொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங்கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

வெளியி லிரேகை யிரேகையி லத்தலைசுளியில் உகாரமாஞ் சுற்றிய வன்னிநெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதந்தெளியும் பிரசாதஞ் சிவமந் திரமே.

அகார உகார சிகார நடுவாய்வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்சிகார முடனே சிவன்சிந்தை செய்யஒகார முதல்வன் உவந்துநின் றானே.

அற்ற விடத்தே அகாரம தாவதுஉற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச்செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே.

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும்மவ்வென் றென்னுள்ளே வழிபட்ட நந்தியைஎவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

நீரில் எழுத்திவ் வுலக ரறிவதுவானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லையாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்மாலை நடுவுற ஐம்பது மாவனமேலை நடுவுற வேதம் விளம்பியமூலன் நடுவுற முத்தியும்தந் தானே.

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்றுபாவிக ளத்தின் பயனறி வாரில்லைஓவிய ராலும் அறியவொண் ணாததுதேவியுந் தானுந் திகழ்ந்துஇருந் தானே.

அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பதுஉந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்அந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.

சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெறஆவிக்குள் மந்திரம் ஆதார மாவனபூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்ஆவிக்குள் மந்திரம் அங்குசமு மாமே.

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்பெருகு துடியிடை பேணிய விந்துமருவி யகார சிகார நடுவாய்உருவிட லாறு முறுமந் திரமே.

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்சந்திர னோடே தலைப்படு மாயிடில்அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்குஓரெழுத் தாலே உயிர்பெற லாமே.

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுளநாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப்பந்தத் தலை பதினாறு கலையதாங்கந்தர வாகரங் காலுடம் பாயினாள்அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும்ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத்து ஆமே.

அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன்அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்போந்திடும் என்னும் புரிசடை யோனே.

உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும்பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்விண்ணின் றமரர் விரும்பி அடிதொழஎண்ணின் றெழுத்துஅஞ்சு மாகிநின் றானே.

ஐந்தின் பெருமை அகலிட மாவதும்ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்ஐந்தின் பெருமை யறவோன் வழக்கமும்ஐந்தின் வகைசெயப் பாலனு ஆமே.

வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்துஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே.

நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவதுநாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்றுநாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்குநாலாம் எழுத்துஅது நன்னெறி தானே.

இயைந்தனள் ஏந்திழை என்னுள மேவிநயந்தன ளங்கே நமசிவ என்னும்பயந்தனை யோரும் பதமது பற்றும்பெயர்ந்தனன் மற்றும் பிதற்றறுத் தேனே.

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினைஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்நாம நமசிவ என்றிருப் பாருக்குநேமத் தலைவி நிலவிநின் றாளே.

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்இட்ட மறந்திட் டிரவு பகல்வரநட்டம தாடு நடுவே நிலயங்கொண்டட்டதே சப்பொரு ளாகிநின் றாளே.

அகாரம் உயிரே உகாரம் பரமேமகார மலமாய் வருமுப் பதத்திற்சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய்யகாரம் உயிரென் றறையலு மாமே.

நகார மகார சிகாரம் நடுவாய்வகாரம் இரண்டும் வளியுடன் கூடிஒகார முதற்கொண் டொருகால் உரைக்கமகார முதல்வன் மனத்தகத் தானே.

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வனஅஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவனஅஞ்சையுங் கூடத் தடக்கவல் லார்கட்கேஅஞ்சாதி யாதி அகம்புக லாமே.

ஐந்து கலையில் அகராதி தன்னிலேவந்த நகராதி மாற்றி மகராதிநந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ்சந்திசெய் வார்கட்குச் சடங்கில்லை தானே.

மருவும் சிவாயமே மன்னும் உயிரும்அருமந்த போகமும் ஞானமும் ஆகும்தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலேஅருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே.

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லைதஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே.

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ்சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

சிகார வகார யகார முடனேநகார மகார நடுவுற நாடிஒகார முடனே ஒருகா லுரைக்கமகார முதல்வன் மதித்துநின் றானே.

நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினைசிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத்தம்முத லாகுஞ் சதாசிவந் தானே.

நவமுஞ் சிவமும் உயிர்பர மாகும்தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ்சிவமொன்றி யாய்பவ ராதர வால்அச்சிவமென்ப தானெனுந் தெளி வுற்றதே.

கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறிநாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்துஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்தேடி அதனைத் தெளிந்துஅறி யீரே.

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

எட்டு வரையின்மே லெட்டு வரைகீறிஇட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச்சிட்ட அஞ்செழுத்துஞ் செபிசக் கரமே.

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்ஆனஇம் மூவரோ டாற்றவ ராதிகள்ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ்சேனையும் செய்யச்சிவ சக்கரந் தானே.

பட்டன மாதவ மாறும் பராபரம்விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்தஅவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றானஅவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

வித்தாஞ் செகமய மாக வரைகீறிநத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும்பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைகொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்பண்டழி யாத பதிவழி யேசென்றுநண்பழி யாமே நமவென லாமே.

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

ஆறெழுத் தாவது வாறு சமயங்கள்ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்சாவித் திரியில் தலையெழுத் தொன்றுளபேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலேகட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டுமட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

நம்முதல் அவ்வொடு நாவின ராகியேயம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டுஉம்முத லாக வுணர்பவர் உச்சிமேல்உம்முத லாயவன் உற்றுநின் றானே.

நின்ற அரசம் பலகைமேல் நேராகஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந்துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

கரண விரளிப் பலகை யமன்றிசைமரணமிட் டெட்டின் மகார வெழுத்திட்டுவரணமி லைங்காயம் பூசி யடுப்பிடைமுரணிற் புதைத்திட மோகன மாகுமே.

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்பாங்கு படவே பலாசப் பலகையிற்காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டோங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற்பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்துமுச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திடஅச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசிஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டுவாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

எண்ணாக் கருடனை ஏட்டில் யகாரமிட்டெண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடாவெண்ணாவற் பலகை யிட்டுமேற் கேநோக்கிஎண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #914

1 / 89

0:000:00
2. திருவம்பலச் சக்கரம்பாடல் 914

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com