திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 916

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அரகர என்ன அரியதொன் றில்லைஅரகர என்ன அறிகிலர் மாந்தர்அரகர என்ன அமரரும் ஆவர்அரகர என்ன அறும்பிறப் பன்றே.

உரை

அரகர என்று சொன்னால் அரியது என்று ஒன்றும் இல்லை. அரகர என்று சொல்லியும் மாந்தர் (மனிதர்) அறிவதில்லை. அரகர என்று சொல்பவர் தேவராகவும் ஆவார்கள். அரகர என்று சொன்னால் பிறவியே அறுந்துவிடும் என்று இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    அரகர என்ன அரியதொன் றில்லை,

  • வரி 2

    அரகர என்ன அறிகிலர் மாந்தர்,

  • வரி 3

    அரகர என்ன அமரரும் ஆவர்,

  • வரி 4

    அரகர என்ன அறும்பிறப் பன்றே.

திருமந்திரம் பாடல் #916

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout