திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 975

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அகாரம் உயிரே உகாரம் பரமேமகார மலமாய் வருமுப் பதத்திற்சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய்யகாரம் உயிரென் றறையலு மாமே.

உரை

ஓங்கார மந்திரத்தில் அகாரம் எனும் எழுத்து உயிர்களாகவும், உகாரம் எனும் எழுத்து பரம்பொருளாகவும், மகாரம் எனும் எழுத்து மலமாகவும் இருக்கின்றது. இம்மூன்று எழுத்துக்களும் சேர்ந்த 'ஓம்' எழுத்திற்குள் 'சிவய' மந்திரமும் அடங்கியுள்ளது. அந்த 'சிவய' மந்திரத்தில் சிகாரம் சிவமாகவும், வகாரம் வடிவமாகவும், யகாரம் உயிராகவும் இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    ஓங்கார மந்திரத்தில் அகாரம் உயிர்களாகவும், உகாரம் பரம்பொருளாகவும் இருக்கின்றது.

  • வரி 2

    வருகின்ற மூன்று பதங்களில் மகாரம் மலமாக இருக்கின்றது.

  • வரி 3

    இம்மூன்று எழுத்துக்களும் சேர்ந்த "ஓம்" எழுத்திற்குள் "சிவய" மந்திரமும் அடங்கியுள்ளது; அதில் சிகாரம் சிவமாகவும், வகாரம் வடிவமாகவும் இருக்கின்றது;

  • வரி 4

    யகாரம் உயிர் என்று சொல்லலாம்.

திருமந்திரம் பாடல் #975

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout