தொடர்ந்து படிக்கread this section continuously
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.
உரைmeaning
திருவம்பலச் சக்கரத்திற்குள் இருக்கும் 'நமசிவாய' என்னும் ஐந்து மந்திர எழுத்துக்களும், இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல, ஒவ்வொரு மந்திரத்திற்கும் முதல் எழுத்தாகவும் அதன் மற்ற எழுத்துக்களோடும் கலந்திருக்கும் வகையில் சுழற்றி அமைக்கப்படுகின்றன. இப்படி அமைக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் சேர்ந்து ஐம்பத்தோரு எழுத்துக்களாக அமைந்து வரையப்படும் திருவம்பலச் சக்கரத்தில், இனிப்போடு கலந்திருக்கும் சுவை போலவே இறைவனும் கலந்து நிற்பான்.
Within the sacred Ambalam chakra, the five mantra letters of namasivaya are arranged, turned in rotation, so that each letter stands first in one of the mantras while also being blended among the letters of the others, just as a sweetness is blended into a taste. All the mantras so arranged together form the fifty-one letters that are drawn as the sacred Ambalam chakra, and within it God himself stands blended, just as a sweetness is blended into a taste.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
திருவம்பலச் சக்கரத்திற்குள் இருக்கும் 'நமசிவாய' என்னும் ஐந்து மந்திர எழுத்துக்களும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் முதல் எழுத்தாக மாறி மாறி வரும்படி சுழற்றி அமைக்கப்படுகின்றன.
Within the sacred Ambalam chakra, the five mantra letters of namasivaya are arranged, turned in rotation, so that each letter stands first in one of the mantras.
- வரி 2Line 2
இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல, ஒவ்வொரு எழுத்தும் மற்ற எழுத்துக்களோடும் கலந்திருக்கும்.
Each also blends among the letters of the others, just as a sweetness is blended into a taste.
- வரி 3Line 3
இப்படி அமைக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் சேர்ந்து ஐம்பத்தோரு எழுத்துக்களாக அமைந்து திருவம்பலச் சக்கரமாக வரையப்படும்.
All the mantras so arranged together form the fifty-one letters that are drawn as the sacred Ambalam chakra.
- வரி 4Line 4
அந்தச் சக்கரத்திற்குள் இனிப்போடு கலந்திருக்கும் சுவை போலவே இறைவனும் கலந்து நிற்பான்.
Within that chakra, God himself stands blended, just as a sweetness is blended into a taste.
திருமந்திரம் பாடல் #945





