தொடர்ந்து படிக்கread this section continuously
ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியைநாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தைஆமென் றெழுப்பியவ் வாறுஅறி வார்கள்மாமன்று கண்டு மகிழ்ந்துஇருந் தாரே.
உரைmeaning
முன்பு சொன்னபடி 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்துத் தமக்குள் இருக்கும் இறைவனைக் குருவாக உணர்ந்து, 'ஓம்' என்னும் மந்திரத்தோடு 'நம' என்னும் மந்திரத்தையும் சேர்த்து உச்சரித்து, மூலாதாரத்தில் பிரணவ மந்திரத்தின் வடிவமாய் இருக்கும் இறைவனை எழுப்பிவிட்டு, அதனோடு முன்பு சொன்ன 'அம்' என்னும் மந்திரத்தையும் சேர்த்துச் செபித்து மந்திரத்தைக் கைவரப் பெற்றவர்கள், தமக்குள் இறைவன் ஓயாது நடனமாடும் திருச்சிற்றம்பலக் கூத்தைக் கண்டு பேரின்பத்தில் திளைத்திருப்பார்கள்.
As before, chanting the Pranava mantra Om and realizing the God within oneself as the Guru, one should chant the mantra Om together with the mantra Nama, thereby awakening the God who dwells at the Muladhara in the form of the Pranava mantra, and add to it the mantra Am spoken of earlier. Those who master this mantra by chanting so will behold within themselves the sacred dance of Tiruchitrambalam, which God dances without ceasing, and remain immersed in supreme bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முன்பு சொன்னபடி 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்துத் தமக்குள் இருக்கும் இறைவனைக் குருவாக உணர்ந்து, அதன்மூலம் தன் உள்ளத்திலிருக்கும் மேலான நந்தியை எழுப்ப வேண்டும்.
As before, chanting the Pranava mantra Om and realizing the God within oneself as the Guru, one should thereby awaken the noble Nandi within.
- வரி 2Line 2
'ஓம்' என்னும் மந்திரத்தோடு 'நம' என்னும் மந்திரத்தையும் சேர்த்து உச்சரித்து, மூலாதாரத்தில் பிரணவ மந்திரத்தின் வடிவமாய் இருக்கும் இறைவனை எழுப்பிவிட வேண்டும்.
One should chant the mantra Om together with the mantra Nama, thereby awakening the God who dwells at the centre in the form of the Pranava mantra as a lamp.
- வரி 3Line 3
அதனோடு முன்பு சொன்ன 'அம்' என்னும் மந்திரத்தையும் சேர்த்துச் செபித்து மந்திரத்தைக் கைவரப் பெறவேண்டும்.
Adding to this the mantra Am spoken of earlier and chanting so, one should master the mantra.
- வரி 4Line 4
அப்படி மந்திரத்தைக் கைவரப் பெற்றவர்கள், தமக்குள் இறைவன் ஓயாது நடனமாடும் திருச்சிற்றம்பலக் கூத்தைக் கண்டு பேரின்பத்தில் திளைத்திருப்பார்கள்.
Those who master the mantra so will behold within themselves the sacred dance of Tiruchitrambalam, which God dances without ceasing, and remain immersed in supreme bliss.
திருமந்திரம் பாடல் #944





