தொடர்ந்து படிக்கread this section continuously
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போகஉரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.
உரைmeaning
'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் அனைத்து உயிர்களுக்குள்ளும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. எதையும் கொடுக்கும் வல்லமை கொண்ட இந்த மந்திரத்தை முறைப்படி குருவிடமிருந்து உபதேசமாகப் பெற்று, பகைவர்கள் போலத் தம்மைச் சூழ்ந்திருக்கும் வினையால் உண்டாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் நீங்கும்படி அந்தப் பிரணவ மந்திரத்தை ஓயாமல் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
The Pranava mantra Om keeps moving within all living beings. This mantra, which has the power to grant anything, should be received in the proper manner as initiation from a Guru, and one should keep uttering that Pranava mantra without ceasing, so that all the pleasures and sorrows born of the karma that surrounds one like enemies may be removed.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் அனைத்து உயிர்களுக்குள்ளும் இயங்கிக்கொண்டே இருக்கிறது.
The Pranava mantra Om keeps moving within all living beings.
- வரி 2Line 2
எதையும் கொடுக்கும் வல்லமை கொண்ட இந்த மந்திரத்தை முறைப்படி குருவிடமிருந்து உபதேசமாகப் பெற வேண்டும்.
This mantra, which has the power to grant anything, should be received in the proper manner as initiation from a Guru.
- வரி 3Line 3
பகைவர்கள் போலத் தம்மைச் சூழ்ந்திருக்கும் வினையால் உண்டாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் நீங்கும்படி அந்தப் பிரணவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
One should utter that Pranava mantra so that all pleasures and sorrows born of the karma that surrounds one like enemies may be removed.
- வரி 4Line 4
அந்தப் பிரணவ மந்திரத்தை ஓயாமல் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
One should keep uttering that Pranava mantra without ceasing.
திருமந்திரம் பாடல் #943





