திருமூலர் அருளிய திருமந்திரம்
1. அசபை

நான்காம் தந்திரம் பாடல் 884–913 (30 பாடல்கள்)

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடிசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைஏற்றுகின் றேன்நம் பிரானின்ஓர் எழுத்தே.

ஓரெழுத் தாலே உலகெங்குந் தானாகிஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியைமாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்தேவர் உறைகின்ற திருவம் பலமேதேவர் உறைகின்ற தென்பொதுவே ஆமே.

ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்ஆமே திருக்கூத் தனவரத் தாண்டவம்ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்ஆமே சங்காரத் தருந்தாண் டவங்களே.

தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்துதாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம்தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந்தானே அகார உகாரம தாய்நிற்குந்தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்தானே தனக்குத் தராதலமுந் தானே.

தராதல மூலைக்குத் தற்பர மாபரன்தராதலம் வெப்பு நமசி வாயந்தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்தராதல யோகம் தயாவாசி யாமே.

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்ஆமே பரங்கள் அறியா விடம்என்பஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்ஆமே சிவகதியே ஆனந்த மாமே.

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்ஆனந்தம் சிவாய அறிவார் இங்கில்லைஆனந்த மோடும் அறியவல் லார்கட்குஆனந்தக் கூத்தாகவே அகப்படுந் தானே.

படுவ திரண்டு பலகலை வல்லார்படுவ தோங்காரம் பஞ்சாக் கரங்கள்படுவது சங்காரத் தாண்டவப் பத்திபடுவது கோணம் பரந்திடும் வாறே.

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்வாறே சிவகதி வண்டுறை புன்னையும்வாறே திருக்கூத் தாகம வசனங்கள்வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

அமலம் பதிபசு பாசம் ஆகமம்அமலம் திரோதாயி யாகுமா னந்தம்அமலம் சொல்ஆணவ மாயை காமியம்அமலம் திருக்கூத்தா டுமிடந் தானே.

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்குந்தானே தனக்குத் தன்மலையு மாய்நிற்குந்தானே தனக்குத் தன்மயமு மாய்நிற்குந்தானே தனக்குத் தலைவனு மாய்ஆமே.

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்இணையார் கழலிணை ஏழா யிரமே.

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்ஏழா யிரத்தும் எழுகோடி தானாகிஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்ஏழா யிரண்டாக இருக்கின்ற வாறே.

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லைஇருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனிஇருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே.

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்தானே அகார உகாரம தாய்நிற்கும்தானே ரீங்காரத்து தத்துவக் கூத்துக்குத்தானே உலகில் தனிநடனந் தானே.

நடமிரண் டொன்றே நளினம தாகும்நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்துநடமிரண் டொன்றே நகைசெயா மந்திரம்நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

செம்புபொன் னாகுஞ் சிவாய நமஎன்னில்செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்செம்புபொன் னாவது திருவம் பலமே.

திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்திருஅம் பலமாக ஈராறு கீறித்திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

வாறே சிவாய நமச்சி வாயநமவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லைவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாதுபொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்பொன்னாக வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

பொற்பாதம் காணலாம் புத்திர ருண்டாகும்பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம்நல்ல மடவார் நயந்துட னேவருஞ்சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடுஞ்சொல்லுந் திருக்கூத்தின் சூக்குமமுந் தானே.

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலுமேற்சூக்கும மான வழியிடைக் காணலாஞ்சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ்சூக்கும மான சிவனதா னந்தமே.

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திடஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடும்ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம் ஆம்ஆகுமே.

மேனி யிரண்டும் விலங்காமன் மேற்கொள்ளமேனி யிரண்டு மிகாரவி காரியாமேனி யிரண்டுமூ வாயியே யோவென்றுமேனி யிரண்டுமீ யோவூவா வேகூத்தே.

கூத்தே சிவாய நமமசி வாயிடும்கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்கூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும்கூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே.

ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாடஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாடஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாடமன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #884

1 / 30

0:000:00
1. அசபைபாடல் 884

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com