தொடர்ந்து படிக்கread this section continuously
படுவ திரண்டு பலகலை வல்லார்படுவ தோங்காரம் பஞ்சாக் கரங்கள்படுவது சங்காரத் தாண்டவப் பத்திபடுவது கோணம் பரந்திடும் வாறே.
உரைmeaning
இறைவனைப் பல வகையான யோகத்தாலும் ஞானத்தாலும் தமக்குள் உணர்ந்து அடைந்த யோகியர்களாலும் ஞானியர்களாலும், இறைவனை உணர்ந்துகொள்ளும் முறைகளாகச் சொல்லப்படுவது இரண்டு வித்தாக இருக்கும் பல கலைகளாகும். அவை ஓங்காரம் என்னும் ஓம் மந்திரமும், பஞ்சாக்கரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் ஆகும். இவை இறைவனின் சங்காரத் தாண்டவத்தின் அருளல் தொழிலோடு சேர்ந்து, உயிர்களின் உடலுக்குள் இருக்கும் பல தளங்களிலும் பரவி இருக்கும் முறைகளும் ஆகும்.
Yogis and jnanis who have realized and attained the Lord within themselves through many kinds of yoga and knowledge speak of many arts, springing from two seeds, as the ways of realizing the Lord. They are the Om mantra, Omkaram, and the five-lettered mantra, Panchaksharam. These, together with the grace-work of the Lord's dance of dissolution, are also the ways by which that power spreads through the many levels within the bodies of living beings.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனைப் பல வகையான யோகத்தாலும் ஞானத்தாலும் தமக்குள் உணர்ந்து அடைந்த யோகியர்களாலும் ஞானியர்களாலும் சொல்லப்படுவது, இரண்டு வித்தாக இருக்கும் பல கலைகள்.
Yogis and jnanis who have realized and attained the Lord within themselves through many kinds of yoga and knowledge speak of many arts, springing from two seeds.
- வரி 2Line 2
அவை ஓங்காரம் என்னும் ஓம் மந்திரமும், பஞ்சாக்கரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் ஆகும்.
They are the Om mantra, Omkaram, and the five-lettered mantra, Panchaksharam.
- வரி 3Line 3
இவை இறைவனின் சங்காரத் தாண்டவத்தின் அருளல் தொழிலும் ஆகும்.
These are also the grace-work of the Lord's dance of dissolution.
- வரி 4Line 4
இவை உயிர்களின் உடலுக்குள் இருக்கும் பல தளங்களிலும் பரவி இருக்கும் முறைகளும் ஆகும்.
And these are the ways by which that power spreads through the many levels within the bodies of living beings.
திருமந்திரம் பாடல் #893





