தொடர்ந்து படிக்கread this section continuously
மேனி யிரண்டும் விலங்காமன் மேற்கொள்ளமேனி யிரண்டு மிகாரவி காரியாமேனி யிரண்டுமூ வாயியே யோவென்றுமேனி யிரண்டுமீ யோவூவா வேகூத்தே.
உரைmeaning
இறைவனது சொரூபமும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றை விட்டு ஒன்று விலகாமல் இருக்கும்போது, இறைவனது சொரூபமும் சாதகருடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபடாமலும், ஒன்றோடு ஒன்று வேறுபடாமலும் இருக்கும். இறைவனது சொரூபமானது ஊ, ஆ, ஈ, ஏ, ஓ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும், உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமானது ஈ, ஓ, ஊ, ஆ, ஏ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் இருக்கின்றது. இந்த இரு சொரூபமும் ஒன்றாகக் கலப்பதே திருக்கூத்து ஆகும் என இப்பாடல் கூறுகிறது.
When the Lord's own form and the form of a being's soul do not depart from one another, the Lord's own form and the practitioner's soul-form remain unaltered in measure to each other, and undivided from one another. The Lord's own form is itself the five foundational mantras, Oo, Aa, Ee, Ae and O; and a being's soul-form is itself the five foundational mantras, Ee, O, Oo, Aa and Ae. This verse says that the merging of these two forms into one is itself the sacred dance.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனது சொரூபமும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றை விட்டு ஒன்று விலகாமல் இருக்கும்.
The Lord's own form and the form of a being's soul do not depart from one another.
- வரி 2Line 2
அப்போது இறைவனது சொரூபமும் சாதகருடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபடாமலும், ஒன்றோடு ஒன்று வேறுபடாமலும் இருக்கும்.
Then the Lord's own form and the practitioner's soul-form remain unaltered in measure to each other, and undivided from one another.
- வரி 3Line 3
இறைவனது சொரூபமானது ஊ, ஆ, ஈ, ஏ, ஓ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும், உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமானது ஈ, ஓ, ஊ, ஆ, ஏ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் இருக்கின்றது.
The Lord's own form is itself the five foundational mantras, Oo, Aa, Ee, Ae and O; and a being's soul-form is itself the five foundational mantras, Ee, O, Oo, Aa and Ae.
- வரி 4Line 4
இந்த இரு சொரூபமும் ஒன்றாகக் கலப்பதே திருக்கூத்து ஆகும் என இப்பாடல் கூறுகிறது.
This verse says that the merging of these two forms into one is itself the sacred dance.
திருமந்திரம் பாடல் #911





